பாஜக அமைச்சர் ஹரேன் பாண்டையா கொலை வழக்கு: நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரணை

0

பாஜக அமைச்சர் ஹரேன் பாண்டையா கொலை வழக்கு: நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரணை

குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டையாவின் மர்மம் நிறைந்த கொலையை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவன மையம் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் A.K.சிக்ரி மற்றும் அப்துல் நசீர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கின் விசாரணையை ஹரேன் பாண்டையா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேர் விடுதலை செய்யப்பட்ட குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான மனுவை பரிசீலிக்கும் அதே பெஞ்சிடம் வழங்கியுள்ளது. இந்த விசாரணை நீதிப்பதி அருண் மிஸ்ரா தலைமையில் நடைபெறுகிறது.

முன்னர் இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், சமீபத்தில் வெளியான அதிர்ச்சியூட்டம் சில தகவலகள் இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்ய காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கு விசாரணையில் முக்கிய சாட்சியான அசாம் கான் ஹரேன் பாண்டையா கொலை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். பாஜக முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டையாவை கொலை செய்யும் கூலிப்படை ஒப்பந்தத்தை குஜராத் IPS அதிகாரி DGவன்சாரா தங்களுக்கு அளித்தார் என்ற சொஹ்ராபுதீன் ஷேக் தன்னிடம் கூறியதாகவும் இதன் அடிப்படையில் துளசிராம் பிரஜபாதி, நயீம் மற்றும் ஷாஹித் ஆகியோர் ஹரேன் பாண்டையாவை கொலை செய்ததாகவும் கடந்த 2018 நவம்பர் 3 ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் அசாம் கான் தெரிவித்துள்ளார். இத்துடன் இந்த தகவல்களை 2010 ஆம் ஆண்டே சிபிஐயிடம் தான் தெரிவித்ததாகவும் ஆனால் இதனை சற்றும் கண்டுகொள்ளாத சிபிஐ இது தங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் இதனை வெளியில் கூற வேண்டாம் என்று தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல்கள் இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற மனுவுடன் சமர்பிக்கப்பட்டது.

Comments are closed.