பாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா? – சோனியா காந்தி கேள்வி

0

டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. பிறகு காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் “டெல்லியில் நடந்த வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று. இந்த வன்முறைகளுக்கு பாஜக அரசே பொறுப்பு. வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலகவேண்டும்.

பாஜக தலைவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் வகையான கருத்துக்களை பேசி வருகின்றனர். டெல்லி கலவரத்திற்கு பின்னணியில் பாஜகவின் சதி உள்ளது. டெல்லியில் வன்முறை நடக்கும்போது நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷா எங்கே சென்றார்? டெல்லியின் முதல்வர் எங்கே சென்றார்?

வன்முறை தொடர்பாக உளவுத்துறைக்கு முன்கூட்டியே தகவல் கிடைக்கவில்லையா? துணை இராணுவத்தை முன்கூட்டியே அழைக்காதது ஏன்?”

இவ்வாறு சோனியா காந்தி பல கேள்விகளை எழுப்பினார்.

Comments are closed.