பாஜக இணையதளம் ஹேக்: இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு

0

பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

“பிரதமர் மோதி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி அரசு நேற்று மத்தியில் பதவியேற்றது. இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் டெல்லி அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹேக்கர்கள் Bharatiya Janata Party என்பதை Beef Janata Party என மாற்றியுள்ளனர். இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படத்தால் நிரம்பியுள்ளது. இதனையடுத்து இணையதளத்தை சரி செய்துள்ளானர்.

Comments are closed.