பாஜக சார்பு மின்னணு வாக்கு பதிவு எந்திர கோளாறை உறுதி செய்த RTI

0

சமீபத்தில் நடந்து முடிந்த உத்திர பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்திராகன்ட் ஆங்கிய மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் இது போன்று மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டது.

பார்க்க செய்திகள்:
தேர்தல் மோசடி: 6 தொகுதி  மின்னணு வாக்கு எந்திரங்களை கைப்பற்ற உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு
மத்திய பிரதேச தில்லுமுல்லு மின்னணு வாக்கு எந்திரம் உத்திர பிரதேச தேர்தலில் பயன்படுத்தப்பட்டது.
பாஜகவிற்கு வாக்குகளை மாற்றி வழங்கும் மின்னணு வாக்கு எந்திரம்: செய்தியாளர்ளை மிரட்டிய தேர்தல் அதிகாரி
மின்னணு வாக்கு எந்திரங்களின் நம்பகத்தன்மையை விளக்கிய மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி புல்தான ஜில்லா பரிஷத் தேர்தலின் போது சுல்தான்பூர் கிராமத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு எந்திரத்தில் கோளாறு இருப்பதாக எழுந்த புகாரில் மின்னணு வாக்கு எந்திர கோளாறு நடைபெற்றிருப்பது RTI அறிக்கை ஒன்றில்  உறுதி செய்யப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் அணில் கல்கலி இது குறித்து கூறுகையில், “ஒவ்வொரு முறை தேங்காய் சின்னத்திற்கான பட்டனை அழுத்தும் போது பாஜக வின் தாமரை சின்னத்தின் விளக்கு எரிந்தது.” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக  RO வினால் விசாரிக்கப்பட்டு மாவட்ட கலக்டரிடம் சம்ர்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்டுள்ளது.

இவர் குறிப்பிட்ட வேட்பாளரின் புகாரை கேட்டறிந்த பின்னர் கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி தனது இந்த விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளார். இதற்கு பதிலளிக்கையில் “புல்தானா மாவட்ட கலக்டர் அலுவலகத்தின் தேர்தல் துறை, சுல்தான்புரில் உள்ள வாக்குச் சாவடி எண் 56 இல் ஒவ்வொரு முறை வாக்காளர்கள் சுயேச்சை வேட்பாளர் எண் 1 இன் தேங்காய் சின்னத்திற்கு வாக்களித்த போது எண் 4 இல் இருக்கும் பாஜக வேட்பாளரின் தாமரை சின்னத்திற்கு வாக்கு விழுந்துள்ளது” என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக வேட்பாளர் ஆஷா அருண் சோறே காலை 10:30 மணியளவில் புகாரளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பின்னர் மதியம் 1:30 மணியளவில் அதிகபப்டியான புகார்கள் வரவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர் என்றும் கல்கலி தெரிவித்துள்ளார்.

அனைத்து வேட்பாளர்களிடம் பேசிய பின்னர் தேர்தல் அதிகாரி மாணிக்ராவ் பசார் இந்த புகார்களை கவனத்தில் கொண்டு வாக்குச் சாவடி பொறுப்பு அதிகாரி ராம்நாராயண் சாவந்த்திடம் இதனை தெரியப்படுத்தினார். அவர் இதனை RO விடம் தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து துணை RO இந்த வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று இந்த புகாராய் உறுதி செய்ததும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட இந்த மோசடி மின்னணு வாக்கு எந்திரம் சீல் வைக்கப்பட்டு மாற்று எந்திரம் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து பல வேட்பாளர்கள் மறு வாக்குப்பதிவு கோரிய காரணத்தால் இந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு ஐந்து நாட்கள் கழித்து நடைபெற்றுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் பெறப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை ஒன்றே மின்னணு வாக்கு எந்திரத்தில் மோசடி செய்யப்படுகின்றது என்பதற்கான சான்று என்று கல்கலி தெரிவித்துள்ளார். இது பல வாக்காளர்களால் கவனிக்கப்பட்டு RO மற்றும் பிற அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இது போன்ற வாக்கு மோசடிகளை தவிர்க்க தேர்தல் ஆணையம் மின்னு வாக்கு எந்திரங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

இப்படியிருக்க தேர்தல் ஆணையமோ தங்களது மின்னணு வாக்கு எந்திரத்தில் மோசடிகள் செய்ய முடியாது என்று உறுதியாக கூறி வருகிறது.

 

Comments are closed.