பாஜக செய்தி தொடர்பாளரிடம் 8 கோடி பறிமுதல்

0

தெலங்கானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளரிடம் 8 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தெலங்கானா மாநில பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் கிருஷ்ண சாகர் ராவ். பாஜக மாநில அலுவலக வங்கி கணக்கிலிருந்து கிருஷ்ணாவின் வங்கி கணக்குக்கு பணம் பரிமாறப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வங்கிக்கு விரைந்த போலீசார் கிருஷ்ணாவின் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே வைத்திருந்த 2 கோடி ரூபாயையும், வங்கிக்குள் இருந்த கிருஷ்ணாவிடம் 6 கோடி ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.