பாஜக தலைவர் காரை நிறுத்தியால் காவல்படை வீரரை காரில் இழுத்து சென்ற டிரைவர்!

0

ஹரியானாவில் ஊர்க்காவல்படை வீரர் மோனு யாதவ் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பா.ஜ.க தலைவர் சதீஷ் கோடாவின் காரை நிறுத்திய மோனு தவறான பாதையில் வருவதாக கூறியுள்ளார். ஆனால், காவலரை இடித்து தூக்கிய கார், அவரை காரின் மேலே தூக்கியபடி அவரது உயிருக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் சிறிது தூரம் வரை சென்றது.

இதுகுறித்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஊர் காவல்படை வீரர் “நான் சதிஷ் கோடா காரை நிறுத்தினேன். அதற்கு, ஓட்டுநர் இது கோடாவின் கார் என்று கூறினார். நான், கார் தவறான பாதையில் வருகிறது என்று கூறியதற்கு கோடா என்னை அடித்தார்’ என்று கூறினார்.

 

Comments are closed.