பாஜக திட்டங்களை எதிர்த்து போராடவிட்டால் தமிழகத்தின் பெரும்பகுதி அழிந்துவிடும்: வைகோ!

0

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தொடங்கி வைத்தார்.

விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விளைநிலங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்துக்கு எதிராகவும் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டத்தை மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியும் கூட மோடி அரசு கண்டுகொள்ளாமல் இது கண்டனத்திற்குரியது.

நிலங்களை அழிக்கும் மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் ஒன்றிணைந்து போராடாவிட்டால் தமிழகத்தின் பெரும்பகுதி அழியும் நிலைக்கு வந்துவிடும் என வைகோ தெரிவித்தார்.

Comments are closed.