பாஜக பக்கம் ஒரு கவுன்சிலரை கூட இழுக்க முடியாது: மோடிக்கு சவால் விட்ட தி.மு.காங்கிரஸ்

0

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஸ்ரீராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசிய ந்ரேர்ந்திர மோடி, ‘மேற்குவங்கத்தில் விரைவில் தாமரை மலரும் என்றும் அதற்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் மம்தா பானர்ஜியை விட்டு விலகி வருவார்கள் என்றும் கூறினார். மேலும் தற்போது கூட, அக்கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் தம்மிடம் தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், எம்.பியுமான டெரெக் ஓ பிரையன், திரிணமுல் கட்சியை சேர்ந்த ஒரு கவுன்சிலரை கூட, பாஜக கட்சி பக்கம் இழுக்க முடியாது.

பிரதமர் தேர்தல் பரப்புரை நடத்த வந்தாரா? அல்லது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க வந்தாரா? எனத் தெரியவில்லை. ஆட்சி அமைக்க பிரதமர் குதிரை பேரம் நடத்த முயல்வதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப் போகிறேன்’ என தெரிவித்தார்.

Comments are closed.