பாஜக பெண் வேட்பாளர் காரில் ரூ. 1.13 லட்சம் பறிமுதல்

0

மேற்கு வங்கத்தில் கட்டால் தொகுதி பாஜக பெண் வேட்பாளர் பாரதி கோஷின் காரில் இருந்து ரூ.1.13 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓட்டுக்காக வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பாரதி பணத்தை எடுத்து சென்றுள்ளார் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. பாரதி அரசியலுக்கு வரும் முன்பு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: “பாஜக வேட்பாளர் பாரதி கோஷின், மேற்கு மிதுனபுரி மாவட்டம் பிங்லா பகுதியில் வியாழக்கிழமை இரவு அவரது காரை சோதனையிட்டோம். அதில் ரூ.1.13 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. எதற்காக காரில் பணம் எடுத்துச் செல்லப்பட்டது என்பது குறித்து பாரதியால் உரிய விளக்கம் அளிக்கவில்லை. சுமார் 3 மணி நேரம் அவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்த போலீஸார் பின்னர் விடுவித்தனர். இது தொடர்பாக தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.

பின்னர், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாரதி கோஷின், எனது தனிப்பட்ட செலவுகளுக்காக காரில் பணம் வைத்திருந்தேன். அதில் எனது பணம் ரூ.50,000 மட்டும்தான். எனது பிரசார ஒருங்கிணைப்பாளர், அவரது செலவுக்காக ரூ.49,000 வைத்திருந்தார். காரின் ஓட்டுநரிடம் ரூ.13,000 இருந்தது. இந்தப் பணத்தைதான் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். என்னிடம் இருந்த பணம் எப்போது வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரமும் இருக்கிறது. மற்றபடி திரிணமூல் காங்கிரஸியனர் குற்றம்சாட்டுவதுபோல வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பணத்தை எடுத்துச் செல்லவில்லை என்றார்.

Comments are closed.