பாஜக பேரணியின் முன் வரிசையில் கொலை குற்றாவாளி!

0

தாத்ரி மாட்டுக் கறி கும்பல் கொலை வழக்கின் குற்றவாளி விஷால் சிங் பாஜக பேரணியில் முன்வரிசையில் காணப்பட்டார்.

உத்திர பிரதேசம் தாத்ரி பகுதியில் உள்ள பிஷாரா என்னும் ஊர். அங்கு கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று முகமது அக்லாக் என்பவர் 17 பேர் கொண்ட விசகும்பலால் தாக்கி கொல்லப்பட்டார். அவர் பக்ரீதை அன்று மாட்டுகறி உண்டதாகவும், பிறகு வீட்டில் மாட்டுகறி வைத்திருந்ததாலும் கொல்லபட்டார்.

காவல்துறையினர் இந்த கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் 17 பேரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அனைவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு பிஷாராவில் பாஜக பேரணி நடைபெற்றது. இதில் உ. பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இந்த பேரணியில் விசகும்பலை சேர்ந்த குற்றவாளிகளான விஷால் சிங் மற்றும் மற்றோருவரும் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

இந்த தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் சர்மாவை ஆதரித்து பேசிய யோகி, ”சமாஜ்வாதி அரசு கிராம மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி நடந்துள்ளது.  நரேந்திர மோடி அரசு அமைந்த பிறகு அரசியலில் மற்றங்கள் ஏற்பட்டு வருகிறது” என் தெரிவித்துள்ளார்.

Comments are closed.