பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இந்து மதத்திற்கு மிகப்பெரும் கேடு: சங்கராச்சாரி ஸ்வரூபானந்தா

0

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இந்து மதத்திற்கு மிகப்பெரும் கேடு: சங்கராச்சாரி ஸ்வரூபானந்தா

இந்து மதத்தை தங்களுக்கு ஏற்றவாறு ஆர்எஸ்எஸ் வளைத்து திரித்துக் கொண்டிருப்பதை இந்து மதகுருக்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். மேலும் அமைதியான மதமான இந்து மதத்தின் பண்புகளை இந்த இயக்கங்கள் கெடுக்கின்றன என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாட்டில் அதிகரித்துவரும் மத மோதல்களில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இன் பங்கு குறித்து கருத்து தெரிவித்த தர்க்க பீடத்தின் சங்கராச்சாரி ஸ்வரூபானந்த சரஸ்வதி, சமீப காலத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இந்து மதத்திற்கு மிகப்பரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்திற்கு இந்து மதம் குறித்து எதுவும் தெரியாமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “பகாவத் இந்து திருமணம் ஒரு ஒப்பந்தம் என்கிறார். ஆனால் இந்துக்களின் திருமணமோ வாழ்வு முழுவதற்குமானது. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்து என்கிறார் பகாவத், அப்படியென்றால் இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் இந்துக்களுக்கு பிறந்தவர்கள் யார்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பாஜக தலைவர்கள் தான் தேசத்தின் மிகப்பெரும் மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்கள் என்றும் இந்த இரட்டை முகமுடைய பாஜக தான் பசு வதையை எதிர்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் 2014 ஆம் ஆண்டில் பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையாவது அது நிறைவேற்றியுள்ளதா என்று கேள்வி எழுப்பிய அவர், கஷ்மீரில் இருந்து Article370 நீக்கப்பட்டுவிட்டதா என்றும் தேசத்தின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டதா என்றும் நாட்டில் உள்ள ஏழைகளுக்கு ஆளுக்கு தலா 15லட்சம் கொடுக்கப்பட்டுவிட்டதா என்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு விட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விகள் அனைத்தும் மோடி உட்பட பாஜக தலைவர்கள் அனைவரும் பதிலளிள்ள மறுக்கும் கேள்விகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆசாராம் பாபு வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஆசாரம் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் மதத்தின்படி இன்னும் தண்டிக்கப்படவில்லை. ஆசாராம் மட்டுமல்ல அவரது மகன் நரைன் சுவாமியும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்து மதத்தில் இவர்களைப் போன்ற சாமியார்களுக்கு இடமில்லை. இவர்களை மக்கள் நம்பி ஏமாறும்வரை இவர்களைப் போன்றோர் வந்து கொண்டே தான் இருப்பார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரசின் வரிகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,பொதுமக்களுக்கு வரி விதிப்பதற்கு முன் அரசு, எம்பிக்கள் ஏமம்எல்ஏக்களின் ஊதியத்தை குறைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.