பாஜக முயற்சித்து வந்த முத்தலாக் தடை சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!

0

முத்தலாக் தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் எதிர்ப்புகளிடையே தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியுள்ளது.

முத்தலாக் முறை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா கடந்த வாரம் மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 303 வாக்குகளும், எதிராக 82 வாக்குகளித்தனர். இந்த மசோதாவின்படி முத்தலாக் மூலம் மனைவியை விவாகரத்து செய்பவர்கள் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க இந்த மசோதாவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. மக்களவையில் எதிர்ப்பு தெரிவித்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததது. பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவளித்துவிட்டு, மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவிப்பது போல் வெளிநடப்பு செய்ததது.

இந்திலையில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 99 வாக்குகள் மசோதாவுக்கு ஆதராவகும், 84 வாக்குகள் மசோதாவுக்கு எதிராக அமைந்தது. இதனால்  முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

இந்த முத்தலாக் மசோதாவிற்கு, அதிமுக, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

தெலுங்குதேசம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைக்கு வரவில்லை. இந்த மசோதா நிறைவேற இதுவே மிக முக்கிய காரணமாக அமைந்தது.

Comments are closed.