பாஜக முயற்சித்து வரும் முத்தலாக் தடை சட்ட மசோதா: மக்களவையில் இன்று தாக்கல்!

0

முத்தலாக் முறை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் மசோதா தாக்கல் இன்று மக்களவையில் நடைபெற உள்ளது.

முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. மசோதாவின் அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நீக்கப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில், பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தில் மக்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் 21ஆம் தேதி தாக்கல் செய்தார். அதில் இந்த மசோதா மீது இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்று நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பாஜக எம்பிக்கள் அனைவரும் தவறாமல் இன்று மக்களவைக்கு வரும்படி கட்சி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மோடி ஆட்சியில் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டபோதும், எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பால் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. காங்கிரஸ், திரிணாமூல், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இந்நிலையில் மக்களவையில் இன்று இந்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்து கொண்டுள்ளது.

Comments are closed.