பாஜக, மோடியை விமர்சித்ததால் மிரட்டல்: ராமச்சந்திர குஹா

0

பிரபல எழுத்தாளரும் வரலாற்றாளருமான ராமச்சந்திர குஹா, தான் மோடியையும் பாஜக வையும் விமர்சித்ததால் தனக்கு மிரட்டல் கடிதங்கள் மின்னஞ்சலில் வருகின்றன என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவத்துள்ளார். இன்னும் அந்த கடிதங்களில், இனிமேல் அவர் மோடியையோ, அமித் ஷாவையோ, அல்லது பாஜகவையோ விமர்சிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதங்களில், மோடியை இந்திரா காந்தியுடனோ, அமித்ஷா வை சஞ்சய் காந்தியுடனோ தொடர்பு படுத்தி பேசக்கூடாது என்றும் இந்த பாஜக தலைவர்களை கடவுளால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் “அவ்வாறு எழுதுவதற்கு முன், அப்படி எழுத நீங்கள் யார் என்று சிந்திக்க வேண்டும்” என்று அந்த கடிதங்களில் கூறப்பட்டுள்ளதாகவும், கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் என்றால் என்ன என்றும் கடவுள் அருள் பெற்றவர்கள் என்றால் என்ன என்றும் முதலில் அவர் புரிந்துகொள்ளவேண்டும் என்று தனக்கு கடிதம் எழுதியர்வர்கள் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மிரட்டல் கடிதங்கள் பலரால் தனக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவை அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளது என்றும் கூறிய அவர் இது வழக்கமாக வருவது தான் என்றும் கூறியுள்ளார்.

Comments are closed.