பாஜக வேட்பாளர் மகனின் வாகனத்தை நிறுத்திய பெண் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்

0

உத்தர பிரதேச மாநிலம் டவுன் ஹால் சந்திப்பில் பெண் காவல்துறை அதிகாரி சுஷ்மா யாதவ் மற்றும் காவலர் அஜய் மாலிக் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ. வும் புவாயன் தொகுதி வேட்பாளருமான சேத்ரம்மின் மகன் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் தங்கள் வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தியதற்காக அவர்களை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் கமால் கிஷோர் கூறுகையில், காவல்துறை துணை ஆய்வாளர் சுஷ்மா யாதவ் மற்றும் காவலர் அஜய் மாலிக் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது அவ்வழியே வந்த வாகனம் ஒன்றில் ஓட்டுனர் போதிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வாகனத்தை ஒட்டி வந்ததாகவும் கூறியுள்ளார். அவரை நிறுத்தி சோதனை செய்த அதிகாரிகளிடம் தான் எம்.எல்.ஏ வின் மகன் என்று அவர்  கூறவே அவரை காவலர்கள் அங்கிருந்து செல்ல அனுமதித்துள்ளனர். ஆனால் சிறிது நேரம் கழித்து அங்கு இன்னும் சிலருடன் வந்த ஷேத்ரம்மின் மகன், தன வாகனத்தை நிறுத்திய காவலர்களை கம்புகளால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த நிகழ்வை அடுத்து இத்தாக்குதலில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ வின் மகன் மற்றும் அவரின் இரண்டு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.