பாஜக வை பதம் பார்க்கும் குஜராத் மக்கள்: உள்துறை அமைச்சர் மீது செருப்பு வீச்சு

0

குஜராத் வரலாற்றில் முதன் முறையாக உள்துறை அமைச்சர் பிரதிப்சிங் ஜடேஜா மீது சட்டசபை வளாகத்தில் வைத்தே காலனி வீசப்பட்டுள்ளது. இவர் மீது காலனி எறிந்தவர் கோபால் இடாலியா என்று அறியப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலை 11 மணியளவில் இவர் சட்டசபை வளாகத்தின் வெளியே காத்திருந்துள்ளார். குஜராத் உள்துறை அமைச்சர் பிரதிப்சிங் ஜடேஜா சட்டசபை வளாகத்தில் வைத்து பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவரை நோக்கை தனது காலனியை எறிந்த கோபால் பாஜக விற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பியுள்ளார்.

“சுயநலமிக்க ஊழல் நிரம்பிய மாநில பாஜக அரசு, குஜராத்தின் வேலையில்லாத இளைஞர்களை சீரழிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார். அவரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து இழுத்துச் சென்றனர்.

அவர் மீது இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப்பிரிவு 332, 337, 352, 353, 355, 447 மற்றும் 120(b) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காந்திநகர் காவதுறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சபாநாயகர், அனைவருக்கும் போராடும் உரிமை உண்டு, ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை எதிர்த்து இத்தகைய போராட்டத்தை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

பின்னர் இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்று பாஜக மாநில தலைவர் ஜிது வகானி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சக்திசிங் கொஹில், இந்த சம்பவத்திற்கு பின்னால் இருக்கும் எந்த காங்கிரசார் மீதும் வகானி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.

இது ஒரு தனிப்பட்ட சம்பவமாக பார்க்க இயலாது. சமீபத்தில் குஜராத்தில் பாஜக வினருக்கு எதிரான எதிர்ப்பு வலுத்து வருகிறது. முன்னதாக BJYM (பாஜக இளைஞர் அணி) தலைவர் ருத்விஜ் படேல் மெஹ்சானா பகுதியில் பொது இடத்தில் வைத்து அறையப்பட்டார். மீண்டும் அவரது வாகனத்தின் மீது சூரத்தில் அழுகிய முட்டைகள் வீசப்பட்டன. மற்றொரு நிகழ்வில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யான ஷங்கர்பாய் வேகாத் சுரேந்திரநகரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் வைத்து அறையப்பட்டார். சமீபகாலமாக குஜராத்தில் பாஜக அரசிற்கும் பல்வேறு தரப்பு சமூகத்தினருக்கும் இடையே பல மோதல்கள் நடந்து வருகின்றது. இது குஜராத்தில் பாஜக வின் நிலையை பட்டவர்த்தனமாக உணர்த்துகின்றது.

Comments are closed.