பாஜக ஹிந்தி திணிப்பிற்கு தகுந்த பதிலடி கொடுத்த பிஜூ ஜனதாதள் தலைவர்

0

மத்திய பாஜக அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக பல இடங்களில் இருந்து எதிர்ப்புகள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஓடிசாவின் பிஜூ ஜனதாதள் தலைவர் தனக்கு இந்தியில் கடிதம் எழுதிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு ஓடியா மொழியில் பதில் எழுதி  பாஜக பாணியிலேயே அவர்களுக்கு பதிளித்துள்ளார்.

இந்தி மொழி பேசாத இந்தியர்கள் மீது இந்தியை திணிப்பதை கண்டித்த ததகட் சத்பதி, மத்திய அமைச்சர் இந்தி மொழியில் எழுதிய கடிதத்தை தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறி அவருக்கு ஓடியா மொழியில் பதிலளித்துள்ளார்.

இந்த இரு கடிதங்களையும் ட்விட்டரில் பகிர்ந்த சத்பதி, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் மத்திய அரசு ஒரு மொழி பெயர்ப்பாளரை பணியமர்த்தி அம்மாநிலங்களுடன் அம்மாநில மொழியிலேயே தொடர்பு கொள்ளட்டும் என்று கூறியுள்ளார்.

2022 இற்குள் புது இந்தியா என்ற மோடியின் திட்டம் குறித்து ஜில்லா மற்றும் பஞ்சயத் அளவிலான கூட்டம் ஒன்றிற்கு சத்பதியை கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அழைத்து எழுதிய கடிதமே இது.

தனது கடிதம் குறித்து சத்பதி கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் எந்த ஒரு மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, ஓடியா மக்கள் மிகவும் புத்திக் கூர்மையுள்ளவர்கள். நாங்கள் ஹிந்தி மொழி கற்றோம், அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் வேறு மொழி கற்றவர்கள் இதைவிட முன்னேற்றம் அடைந்துள்ளதை நாங்கள் தற்போது உணர்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு மைல்கற்களில் இந்தி திணிப்பு தொடங்கி கர்நாடக மெட்ரோ மற்றும் தற்போது ஓடிசா வரை மத்திய அரசின் இந்தி திணிப்பு விரிவடைந்துள்ளது. இந்த அனைத்து இடங்களிலும் மக்கள் மக்கள் இந்த இந்தி திணிப்பிற்கு எதிராக களம் காண்டு வருவது குறிப்பிடத்தக்கது..

Comments are closed.