பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாக தாக்குதலை முன்னின்று நடத்திய பா.ஜ.க. எம்.எல்.ஏ

0

நேற்று பாடியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பத்திரிக்கையாளர்களை வழக்கறிஞர் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை டெல்லி விஷ்வாஸ் நகரை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. முன்னின்று நடத்தியுள்ளார் என்று தற்பொழுது செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவ சங்க தலைவர் கன்ஹையா குமார் தேசவிரோத குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்பலைகள் எழுந்து வருகிறது. நேற்று அந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற வளாகத்தில் வலம் வந்த ஒரு வழக்கறிஞர் குழு அங்கு இருந்த ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தை சேர்ந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளது. இதனை படம் பிடித்து விடுவார்கள் என்று பத்திரிகையாளர்களையும் தாக்கியுள்ளது. இந்த அத்தாக்குதலை டில்லி விஸ்வாஸ் நகரை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ வான ஓம் பிரகாஷ் ஷர்மா முன்னின்று நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ வான ஓம் பிரகாஷ் ஷர்மா கூறுகையில், “என் கையில் துப்பாக்கி இருந்திருந்தால் நான் அவர்களை சுட்டுருப்பேன். நம் தாயை யாரும் அவமதித்தால் அவர்களை நான் அடிக்க மாட்டேன். சுட்துருப்பேன்” என்று கூறியுள்ளார்.

நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் மிக நெருக்கமானவராக தன்னை எப்போதும் காட்டிக்கொள்ளும் ஷர்மா 2008 இல் அரசியலில் நுழைந்தவர். நேற்று நீதிமன்ற வளாகத்திற்குள் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு CPI தலைவரை இவர் கடுமையாக  தாக்கியுள்ளார். இவரது மகன் ஒருவர் வழக்கறிஞராக உள்ளார். நேற்றைய தாக்குதலில் அவரும் ஈடுபட்டுள்ளாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.

கடந்த வருடம் நவம்பர் மாதம் டெல்லி சட்டபேரவையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அல்கா லம்பாவை நோக்கி ஆபாச வார்த்தைகளை பேசியதினால் சட்டபேரவையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க: JNU, பத்திரிகையாளர்கள் தாக்குதல்

Comments are closed.