பாட்னா குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி கைது

0

மார்ச் 30 அன்று பாட்னா நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி ஏப்ரல் 3 அன்று பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டான்.கைது செய்யப்பட்டவனின் பெயர் குந்தன் குமார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பாட்னா காவல்துறை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் இக்கைது நடைபெற்றதாக பாட்னா மூத்த எஸ்.பி.ஜிதேந்திர சிங் ரானா தெரிவித்தார்.
மார்ச் 30 அன்று பீகாரின் பகதூர்பூரில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது.
இந்த வழக்கின் மற்ற இரு குற்றவாளிகளான ஹேமந்த் குமார் மற்றும் அசோக் குமார் ஆகியோர் இன்னும் கைது செய்யப்படவில்லை.முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதை தொடர்;ந்து இவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து இரு வெடிக்காத குண்டுகளை காவல்துறை கைப்பற்றினர்.2013ல் புத்த கயா மற்றும் காந்தி மைதான் சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை ஒத்ததாக இந்த குண்டுகள் இருந்ததை காவல்துறையினர் சுட்டிக்காட்டினர்.லோட்டஸ் கம்பெனியின் கைக்கடிகாரங்கள் இந்த குண்டுகளில் டைமர்களாக பயன்படுத்தப்பட்டன.
இந்த குண்டுவெடிப்புகள் நடைபெற்றவுடன் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தப்பட்டது.தற்போது ஒரு வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற வழக்குகளிலும் திருப்பங்கள் ஏற்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
(புகைப்படம்: நியூஸ் 18)

Comments are closed.