பாட்லா ஹவுஸ்: மகன்களை தேடி தொடரும் போராட்டம்

0

2008 செப்டெம்பர் மாதம் 19  ஆம் தேதி தனது குடும்பத்தினரிடம் அலைபேசியில் பேசிய சாஜித் செப்டெம்பர் மாதம் 19 தேதி பாட்லா ஹவுஸ் என்கெளண்டரை அடுத்து தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் இன்னும் உயிருடன் உள்ளாரா, அல்லது கொல்லப்பட்டு விட்டாரா என்பது கூட தங்களுக்கு தெரியவில்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

நகை வடிவமைப்பில் தேர்ச்சி பெற்று விளங்கிய சாஜித் மும்பையில் உள்ள தனது உறவினர்களுடன் தங்கி நகை வடிவமைப்பு குறித்து கூடுதல் பயிற்சி பெற்று வந்தார். இதில் டிப்ளோமா படித்தால் வெளிநாடுகளில் நல்ல வேலைக்குச் செல்லலாம் என்று சிலர் கூறவே டில்லிக்கு தனது கல்வி சேர்க்கைக்காக சென்றுள்ளார் சாஜித். ஆனால் அதன் பிறகு அவரை அவரது குடும்பத்தினர் பார்க்கவே இல்லை என்று கூறுகின்றனர்.

இது சாஜித்தின் கதை மட்டுமல்ல, இது போலவே சஞ்சர்பூரில் வசித்து வந்த இன்னும் மூன்று இளைஞர்களின் கதையும் இது தான். இவர்கள் அனைவரும் 2008 ஆண்டில் இருந்து காணமல் போய்விட்டனர். இவர்கள் தலைமறைவாக உள்ளனர் என்றும், இன்னும் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துவிட்டனர் என்றும் காவல்துறை கூறிவருகிறது. ஆனால் தங்கள் பிள்ளைகளை கொன்றுவிட்டு அவ்வப்போது அவர்களின் பெயர்களை தங்கள் தேவைக்காக காவல்துறை பயன்படுத்தி வருகிறது என்று இவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் தேதி தெற்கு டில்லியில் ஜாமியா நகர் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீவிரவாத செயல்பாடுகளில் தொடர்புடைய சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததாகவும் அதனை தொடர்ந்து நடந்த சோதனையில் சில என்கெளண்டரில் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதில் கொல்லப்பட்டவர்களில் சிலர் சஞ்சர்பூர் பகுதியை சேந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அதோடு இந்த நான்கு இளைஞர்களின் பெயர் தலைமரைவானோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரை அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் அவர்களது குடும்பம் தவித்து வருகிறது.

சாஜித்தின் சகோதரர், முதலில் டில்லி தீவிரவாத தடுப்புப் படை சாஜித் மும்பையில் தலைமறைவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று கூறியதாகவும், பின்னர் 2011 இல் ஆப்கானிஸ்தானில் சண்டை ஒன்றில் குண்டு வெடித்ததில் சாஜித் உடலின் கீழ்ப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியதாகவும் பின்னர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து சண்டையிட்டதில் முதலில் சிரியாவில் உயிரிழந்ததாக கூறியதாகவும் பின்னர் ஈராக்கில் வைத்து சாஜித் உயிரிழந்ததாக கூறியதாகவும் தற்போது ஆறு மாதங்களுக்கு முன்னர் சாஜித் நேபாளத்தில் உள்ளதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைமறைவானோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு இளைஞரான காலித்தின் தாய் ஹசீனா பானு, இந்த சம்பவத்திற்கு பிறகு தனது மற்ற மகன்களுக்கும் பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர் என்று கூறியுள்ளார். ஓவ்வொரு முறையும் காவல்துறை அவர்களை குறித்து காவல் நிலையத்திற்கு விசாரணை வரும் போதெல்லாம் காவல்துறையினர் மோசமாக அறிக்கை சமர்பித்து விடுகின்றனர் என்று கூறியுள்ளார்.

தனது மகன் காலித்துடன் செப்டெம்பர் 18 இரவு 11 மணியளவில் தொலைபேசியில் உரையாடியதாகவும், அப்போது அவர் வேலை ஒன்றிற்காக நேர்முகத் தேர்வுக்கு சென்று வந்ததாகவும் இன்னும் ஆறு மாதங்களில் தனக்கு எப்படியும் ஒரு வேலை கிடைத்து விடும் என்று தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். காலித் நூலக அறிவியலில் முதுகலை பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு பயின்று வந்தார்.

தனது மகனின் பிரிவு குறித்து கூறும் ஹசீனா பானு, தன் கணவரை ஒரு பெருநாளில் போது இழந்ததாகவும் தனது மகனை மற்றொரு பெருநாளின் அருகே இழந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். தனது மகனை தன் கிராமத்தை சேர்ந்த சிலருடன் தான் தான் சேர்ந்து தங்கும்படி கூறியதாகவும் அந்த குடியிருப்பிற்கு சென்று 15 நாட்களில் இவ்வாறு ஆகிவிட்டது என்று கூறி வருந்துகிறார் அந்த தாய்.

லக்னோவில் தங்குவதற்கு விடுதி கிடைப்பது மிகவும் சிரமம், ஒருமுறை விடுதி படிவத்தில் சஞ்சர்பூர் என்று தான் பதிவு செய்ய தன்னை சந்தேகத்துடன் அணுகி தனக்கு அறை கொடுக்க மறுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார் சவுத்.  இவர் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கியமான உறுப்பினர் என்று கூறப்படுகின்ற அபு ரஷித்தின் உறவினர் ஆவார்.

அபு ரஷித்தின் சகோதரர் அபு சாத், தங்களின் மற்றொரு சகோதரரை காவல்துறையினர் பிடித்து வைத்துக் கொண்டு அபு ரஷீதை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறியதாகவும், மறுநாள் குற்றப்பிரிவு காவல்துறையினரின் ஆணைக்கேற்ப மும்பைக்கு கிளம்பிய அபு ரஷித் அதன் பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை என்று கூறுகிறார். காவல்துறையோ அவர் மும்பை வந்து சேரவில்லை என்று கூறுகிறது என்று அபு ரஷித்தின் சகோதரர் கூறுகிறார். மேலும் தற்போது தனது சகோதரர் எங்கே என்றும் அவருக்கு என்ன ஆனது என்பதற்கும் யார் பதிலளிப்பார்கள் என்று கேள்வியெழுப்புகிறார் அவர்.

ரஷீதின் ஏழு வயது மகனுக்கு தனது தந்தையை குறித்த எந்த ஒரு அறிவும் கிடையாது. தங்கள் குடும்பம் ஆறு தலைமுறைகளாக தங்களுக்கு எதிராக காவல்துறையில் ஒரு புகார் கூட இல்லாமல் வாழ்ந்து வந்தவர்கள் என்றும் இந்த 8 வருடங்களில் அவருக்காக ஏங்கி அவரது பெற்றோர்களும் அவர்களின் பெற்றோர்களும் இறந்துவிட்டனர் என்று அவர் கூறியுள்ளார். எங்கள் வீடு தற்பொழுது காலியாக கிடக்கிறது. அபு ரஷித்தின் மனைவி மன அழுத்தத்தில் உள்ளார் என்று ரஷித்தின் சகோதரி சர்வத் அஃப்ஸா கூறுகிறார்.

ரஷித் ஐ.எஸ். அமைப்புடன் சேர்ந்துவிட்டதாக கூறி ஒரு வீடியோவை காட்டினர். ஆனால் அது ரஷித் இல்லை. வீடியோவில் உள்ளவரின் நிறம் ரஷித்தின் நிறத்தோடு ஒத்துப் போகவில்லை என்றும் அதற்கு முன்னதாக ரஷித் சிரியாவில் உள்ளார் என்று காவல்துறையினர் கூறியதாக சாத் தெரிவித்துள்ளார்.

இதே போன்று மிஸ்டர் பாய் என்று அழைக்கப்படும் சாதாப்பின் வீட்டில் அச்சமூட்டும் வகையில் ஒரு அமைதி நிலவுகிறது. அவரது இரு மகன்களான சைஃப், மற்றும் ஷாநவாஸ் காணாமல் போயுள்ளனர். “இதில் இருந்து வெளிப்பட பொறுமைதான் ஒரே வழி, ஆனால் உங்களது இரு மகன்களை பற்றியும் எந்த ஒரு தகவலும் இல்லை என்கிற பட்சத்தில் அது மிகவும் கடினமானது” என்று காணமல் போன இருவரின் தாயான நிகாத் கூறுகிறார். இந்த சம்பவத்தில் இருந்து தனது மற்ற குழந்தைகள் வெளியில் செல்வதை நிறுத்திவிட்டனர் என்றும் தங்களது பிள்ளைகளின் கல்வி முதல் இரண்டு வருடங்களில் முற்றிளுமாக பாதிக்கப்பட்டது என்றும் அதன் பின்னர் தங்கள் வீட்டில் எந்த ஒரு கொண்டாட்டங்களும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.