பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாக்கப் படுகிறார்கள்: அஃலாக்கின் மகன்

0

மாட்டிறைச்சி இவைத்திருந்தார் என்று தன் தந்தை கொல்லப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. அந்த தாக்குதலில் தானிஷ் சைஃபிக்கு ஏற்ப்பட்ட தழும்புகள் அன்று நடந்த நிகழ்வுகளை சைஃபிக்கு நினைவுறுத்திய வன்னம் உள்ளன.

ஆனால் தாக்கப்பட்ட இவரின் குடும்பத்தினர் மீதே வழக்குபதிவு செய்யகோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் இவர்கள் மீது கடந்த வாரம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது என்பது மாட்டிறைச்சி வைத்திருந்தனர் என்பதை பிராதானப்படுத்தி ஒருவரை அடித்துக் கொன்ற குற்றத்தினை புறம் தள்ள செய்யப்படும் முயற்சி என்று சைஃபி கூறியுள்ளார்.
இந்த முதல் தகவல் அறிக்கையினை அடுத்து ஊடங்கங்கள் போக்கு ரத்த வெறி பிடித்து தன் தந்தையை அடித்துக் கொன்ற அந்த கொலைகார கும்பலை கும்பலின் செயலை மிஞ்சியுள்ளது என்று சைஃபி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், என் தந்தையை இழந்து தவிக்கும் நானும் ஈந்து குடும்பமும் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளோம்.அதே நேரம் போலியான குற்றச்சாட்டின் பேரில் ஒரு அப்பாவியை கொலைசெய்தவர்கள் திடீரென மறக்கடிக்கப் பட்டுவிட்டார்கள்.தற்பொழுது எங்களை தாக்கிய கும்பலிடமே நாங்கள் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டியதாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
குதம் புத் நகர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி உத்திரபிரதேச காவல்துறை ஆரி பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அதில் அஃலாக்கின் மனைவி, அவர் தாயார், அவரது மகள், மகன், மற்றும் சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோர் மீது மிருக வதை மற்றும் பசுவதை தடுப்புச் சத்தத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.

இன்னும் தங்களுக்கு நீதியின் மேல் நம்பிக்கையுள்ளது என்று கூறிவருகிறது அக்குடும்பம். அஃலாக்கின் மனைவி, இந்த வழக்கு அரசியல் லாபம் கருதி சிலர் கையில் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தன கணவரை அடித்துக் கொன்ற கூட்டம் தற்பொழுது நீதிமன்றம் தங்களை குற்றவாளி என்று கூற வேடனும் என கோஷம் எழுப்பி வருகிறது என்று கூறியுள்ளார். இன்னும் காவல்துறை வசம் உள்ள இறைச்சி அந்த கொலைகார கும்பல் கூடியிருந்த எங்கள் தெருவில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.