பாதுகாவலர் மூலம் என்னை கொலை செய்ய பாஜக சதி திட்டம்: அரவிந்த் கெஜ்ரிவால்

0

இந்திரா காந்தியை அவரது பாதுகாவலரே கொன்றது போல், தன்னையும் கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த  அரவிந்த் கெஜ்ரிவால், “இந்திரா காந்தியை அவரது பாதுகாவலராலே கொல்லப்பட்டார். அதேபோல் என்னையும் பாதுகாவலராலேயே கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டியுள்ளது. எனது பாதுகாவலர்கள் பாஜகவுக்கு தகவல் அளிக்கிறார்கள். அவர்கள் மோடிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றார்.

கெஜ்ரிவாலின் இந்த குற்றச்சாட்டை டெல்லி போலீஸார் மறுத்துள்ளனர். முதல்வரின் பாதுகாப்புக்காக போடப்பட்டுள்ளவர்கள் அவர்கள் கடமையை செய்கிறார்கள். பாதுகாப்புப் படையினர் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பாதுகாப்பு அளித்து உன்னத பணியாற்றுகின்றனர் என்றனர்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சவுரப் பரத்வாஜ் கூறும்போது, முதல்வரான பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் 6 முறை போலீஸார் முன்னிலையில் தாக்கப்பட்டுள்ளார். அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு டெல்லி போலீஸ் மீது நம்பிக்கை இல்லை என்றார்.

கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு மறுப்பு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரென் ரிஜ்ஜு, “நாங்கள் அரசியல் போட்டியாளர்கள் தான். எதிரிகள் இல்லை. நாட்டுக்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு தரவேண்டியது அரசின் கடமை என்று ட்விட்டர் பதிவில் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார்.

Comments are closed.