பானாயிகுளம் வழக்கு: முன்னணியில் நின்ற என்.சி.ஹெச்.ஆர்.ஓ.

0

பானாயிகுளம் வழக்கு: முன்னணியில் நின்ற என்.சி.ஹெச்.ஆர்.ஓ.

கரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பானாயிகுளம் என்ற கிராமத்தில் 2006 ஆகஸ்டு 15-ஆம் தேதி இளைஞர்களின் குழு ஒன்று ஆடிட்டோரியம் ஒன்றை வாடகைக்கு எடுத்து ‘‘சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு” என்ற தலைப்பில் பகிரங்கமாக கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே காவல்துறையினர் உள்ளே நுழைந்து இது தடைச் செய்யப்பட்ட சிமி இயக்கம் நடத்தும் முகாம் என்று கூறி 17 இளைஞர்களை பிடித்துச் சென்றது. அவர்களில் பெரும்பாலானோர் நிகழ்ச்சியை கேட்பதற்காக வந்தவர்கள். இவ்வழக்கு முற்றிலும் புனையப்பட்டது என்று சில தினங்களுக்கு முன் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

அன்று அருகிலுள்ள பள்ளிக்கூடத்தில் தேசியக் கொடியை ஏற்றிய பிறகு அதில் கலந்துகொண்ட நூற்றுக்கும் அதிகமான நபர்களும் கருத்தரங்கில் கலந்துகொள்ள இருந்தார்கள். அவ்வேளையில் பலத்த மழை பெய்ததன் காரணமாக அவர்களால் அங்கு வர முடியவில்லை. இல்லையெனில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்திருக்கும். சம்பவம் நடந்த மறு தினமே தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பின் (என்.சி.ஹெச்.ஆர்.ஓ.) உண்மை கண்டறியும் குழு பானாயி குளத்திற்கு சென்றது. மாநில நிர்வாகிகளான டாக்டர் வி.எம். அப்துஸ்ஸலாம், வழக்கறிஞர் சாதிக், கே.பி.ஓ.ரஹ்மத்துல்லாஹ், ஏ.எம்.ஷானவாஸ் ஆகியோர் அந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர். காவல்துறை கைது செய்த நபர்களின் வீடுகள், கருத்தரங்கம் நடைபெற்ற ஆடிட்டோரியம், அதற்கு அருகில் உள்ள வீடுகள், பினாமிபுரம் காவல்நிலையம் முதலான இடங்களுக்கெல்லாம் சென்று என்.சி.ஹெச்.ஆர்.ஓ. குழு விசாரணை நடத்தியது.அப்போதுதான் இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை புரிந்துகொள்ள முடிந்தது.

காவல்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுப்பெற்ற ஒருவர் அப்பகுதியில் உள்ள ஸலஃபி பள்ளிவாசலின் நிர்வாக தலைவராக இருந்தார். அந்த பள்ளிவாசலில் இமாமாக பணியாற்றிய ரஷீத் மௌலவி கருத்தரங்கில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என்று ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரியான பள்ளிவாசல் நிர்வாக தலைவர் கட்டளையிட்டும் அதனை மீறி ரஷீத் மௌலவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதனை அறிந்த காவல்துறை முன்னாள் அதிகாரி அருகில் உள்ள காவல்நிலையம், வட்டார ஆய்வாளர், துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை தொலைபேசியில் அழைத்து ஆடிட்டோரியத்தில் சிமியின் முகாம் நடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். என்.சி.ஹெச்.ஆர்.ஓ. உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையில் அந்த அதிகாரி இதனை ஒப்புக்கொண்டார்.

பகிரங்கமாக நடந்த கருத்தரங்கினை சிமியின் முகாமாக சித்தரித்தவர்கள் அந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும், உளவுத்துறையினருமாவர். இச்சம்பவம் குறித்து மறுநாள் மங்களம், மாத்ருபூமி, கேரள கவ்முதி ஆகிய முக்கிய மலையாள பத்திரிகைகளில் வண்ணமயமான கதைகள் வெளியாகின. கருத்தரங்கம் நடைபெற்ற ஆடிட்டோரியத்தில் சிமியின் முகாம் நடந்ததற்கான எவ்வித ஆதாரங்களும் கைப்பற்றப்படவில்லை. மழையின் காரணமாக கருத்தரங்கில் கலந்துகொள்ள இயலாத நபர்களையும், அருகில் உள்ள பள்ளிக்கூட ஆசிரியர்களையும் என்.சி.ஹெச்.ஆர்.ஓ. குழு சந்தித்தது. நோட்டீஸ் விநியோகித்து அனைவருக்கு அழைப்பு விடுத்து வெளிப்படையாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்று அனைவரும் தெரிவித்தனர். சிமி முன்னாள் உறுப்பினர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ஆனால், சிமியின் நிகழ்ச்சி என்ற வாதத்தை அவர்கள் அனைவரும் மறுத்தனர்.

இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட ரஷீத் மௌலவி என்பவர் அளித்த தகவல்களும், பொய்யான சாட்சியமுமே இவ்வழக்கு சிறப்பு புலனாய்வுக்குழு பின்னர் என்.ஐ.ஏ.வின் விசாரணைக்கு செல்ல காரணமானது. ரஷீத் மௌலவியை குற்றவாளி பட்டியலிருந்து விடுவித்து அப்ரூவராக மாற்றவும், 13 பேரை சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யு.ஏ.பி.ஏ.) உள்ளிட்ட குற்றவியல் பிரிவுகளை சுமத்தி நீண்டகாலம் சிறையில் அடைக்கவும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியின் தலைமையில் நடந்த சதித்திட்டமே காரணம் என்று உண்மை கண்டறியும் குழுவிடம் காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் தெரிவித்தனர்.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.