பாபரி மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மீண்டும் நோட்டிஸ்

0

பாபரி மசூதி இடிப்பு வழக்கை விசாரித்து வரும் லக்னோ சிறப்பு நீதிமன்றம் முன்னதாக இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆறு நபர்களை அவர்கள் நீதிமன்றம் முன் மே 20 ஆம் தேதிக்கு ஆஜர் ஆக வேண்டுமென்று நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இவ்வழக்கில் சிபிஐயின் சிறப்பு வழக்கறிஞர் லலித் குமார் சிங், இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள இந்த ஆறு நபர்கள் முன்னதாக இவ்வழக்கில் இருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள். சிறப்பு நீதிபதி S.K.யாதவ் இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19 தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது போல மே 20 ஆம் தேதி  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இத ஆறு நபர்கள், B.L.ஷர்மா, நித்யா கோபால் தாஸ், ராம் விலாஸ் வேதாந்தி, தரம் தாஸ், சதீஷ் பிரதான் மற்றும் சம்பத் ராய் பன்சால் ஆகியோர் ஆவர். இவர்கள் மீது 1992 பாபரி மஸ்ஜித் இடிப்பு சம்பவத்தில் இவர்களுடைய தொடர்பு குறித்து விசாரித்து நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக பாபர் மசூதியை இடிப்பதற்கு கும்பலை தூண்டிய வழக்கு தனியாக ரேபரேலியில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19 தேதி இந்த வழக்கு லக்னோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டு இரண்டு வருடங்களில் தீர்பளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

பாஜக தலைவர்கள் அத்வானி உள்ளிட்டோர் மீது சதித்திட்டம் தீட்டுதல் முதலிய குற்றச்சாட்டுகளை புதிப்பித்த நீதிமன்றம் ராஜஸ்தான் ஆளுநர் கல்யான் சிங் மீதான வழக்கையும் புதுப்பித்துள்ளது. ஆனால் தற்போதைய அவரது பதவிக்காலம் முடியும் வரை அவருக்கு இந்த வழக்கில் இருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்னர் குற்றம் சாட்டப்பட்டு பின் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 13 நபர்களில் 6 பேர் தற்போது உயிருடன் இல்லை என்றும் தற்போது 6  பேருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டுளளது என்றும் வழக்கறிஞர் K.K.மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

Comments are closed.