பாபரி மஸ்ஜித் அறிக்கையில் இந்து தீவிரவாத்தைக் குறித்து எழுதியுள்ளேன் – நீதிபதி லிபர்ஹான்!

0

புதுடெல்லி:இந்து தீவிரவாதத்தைக் குறித்து பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்த விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக நீதிபதி மன்மோகன் சிங் லிபர்ஹான் தெரிவித்துள்ளார்.இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் முதன் முதலாக பிரயோகித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன் தினம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லிபர்ஹான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
’பாபரி அறிக்கையில் தெளிவாக இந்து தீவிரவாதம் என்று எழுதியுள்ளேன்.இதில் இருந்து நான் பின்வாங்கவில்லை.நான் எனது பார்வையை மாற்றினால் கூட இதனை அழித்து விடமுடியாது.நான் ஒரு அரசியல்வாதி அல்ல.முதன் முதலாக இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை நான்தான் பிரயோகித்திருப்பேன்.எந்த வகை தீவிரவாதமும் தவறுதான்.அதில் மரணிப்பவர்கள் நிரபராதிகளாவர்.’ என்று லிபர்ஹான் தெரிவித்துள்ளார்.

1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபரி மஸ்ஜித் ஆர்.எஸ்.எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது.பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த மன்மோகன்சிங் லிபர்ஹான் தலைமையிலான கமிஷன் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டது.1000 பக்கங்களை கொண்ட அறிக்கை 17 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது.

Comments are closed.