பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மீதான வழக்கு விசாரணை இன்று.

0

1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

புதன் கிழமை நடக்க இருந்த இந்த விசாரணையை இன்று மாற்றி உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அகற்றி உத்தரவிட்ட அலஹாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முறையீடு செய்த சி.பி.ஐ.இன் மனு இன்று விசாரிக்கப்படும்.

பாபரி மஸ்ஜித் தொடர்பாக இரண்டு வழக்குகள் ஒன்றாக விசாரிக்கப்பட உள்ளன. ஒன்று டிசம்பர் 6 ஆம் தேதி பாபரி மசூதி இடிப்பின் போது அங்கு இருந்த பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மற்றும் உமா பாரதி ஆகியோர் மீதான வழக்கு. மற்றொன்று பாபரி மசூதி இடயில் ஈடுபட்ட லட்சகணக்கான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீதான வழக்கு.

அத்வானி உட்பட பாஜக தலைவர்கள் 20 பேர் மீது 153A, 153B, 505 ஆகிய பிரிவுகளில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் மீது  இந்திய குற்றப்பரிவு 120B யும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக மே 7 ஆம் தேதி இவர்களை வழக்கில் இருந்து விடுவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.

பாபர் மசூதி குறித்த மேலும் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Comments are closed.