ராமர் கோவில் (பாபரி மஸ்ஜித்) கதவுகளை பூஜைக்காக திறந்து விட்டது ராஜீவ் செய்த தவறு – பிரணாப் முகர்ஜி

0

இந்திய ஜானாதிபதி பிரணாப் முகர்ஜீ தான் எழுதிய “The Turbulent Years: 1980-96” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ராமர் கோவில் (பாபர் மஸ்ஜிதை) கதவுகளை பூஜைக்காக திறந்தது ராஜீவ் காந்தி செய்த மிகப் பெரிய தவறு என்றும் அதன் பின் நிகழ்ந்த பாபரி மஸ்ஜித் இடிப்பு சர்வதேச அளவில் இந்தியாவை தலைகுனிய வைத்துவிட்டது என்றும் குறிபிட்டுள்ளார்.

1986 இல் அயோத்தியில் உள்ள பாபரி மஸ்ஜிதின் கதவுகள் ராமர் கோவில் பூஜைக்காக திறந்துவிடப்பட்டன. இந்த தவறை ராஜீவ் காந்தி தவிர்த்திருக்கலாம் என்று தன் புத்தகத்தில் கூறியுள்ளார். அதன் பின்னர் 1992 இல் நடந்த பாபரி பள்ளி இடிப்பு சம்பவம் இஸ்லாமிய சமூகத்தினருக்கு செய்த மிகப்பெரிய துரோகம் என்றும் அது வெறும் அரசியல் ஆதாயத்திற்காக செய்யப்பட்ட ஒரு அறிவற்ற பொறுப்பற்ற செயல் என்றும் கூறியுள்ளார். இது சகிப்புத்தன்மை கொண்ட பன்முகத்தன்மை உடைய இந்தியாவின் நற்பேறை சர்வதேச அளவில் சிதைத்துவிட்டது என்று குறிபிட்டுள்ளார்.
மேலும் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் பல்வேறு பிரிவை கொண்ட மக்களிடையே பிளவை ஏற்படுத்திய போதிலும் அது சமுதாய அநீதிகளை குறைப்பதில் பெரும்பங்காற்றியது என்றும்  அவர் குறிபிட்டுள்ளார்.
மேலும் “இந்தியாவின் 1989 முதல் 91 வரையிலான காலகட்டம் வன்முறை மற்றும் பிரிவினை ஆதிக்கம் செலுத்தப்பட்ட காலம் என்றும் கூறியுள்ளார்.

Comments are closed.