பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு

0

பாபரி மஸ்ஜித் நில உரிமை வழக்கு

சென்ற இதழ் தொடர்ச்சி…

இறுதி வாதம் தொடங்கியது

செப்டம்பர் 30 -முப்பத்து நான்காம் நாள்

வார விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் இன்று கூடியது. இத்தனை நாட்களும் தொடர்ந்து நடைபெற்ற இரு தரப்பினர்களின் வாதங்களுக்கும் பதிலளிக்கும் இறுதி வாதம் செய்ய (ஸிமீழீஷீவீஸீபீமீக்ஷீ ணீக்ஷீரீuனீமீஸீt ணீஸீபீ க்ஷீமீஜீறீஹ் வீஸீ tலீமீ யீவீஸீணீறீ stணீரீமீ ஷீயீ யீவீஸீணீறீ ணீக்ஷீரீuனீமீஸீt) இரு தரப்பினருக்கும் நாட்கள் ஒதுக்கப்பட்டன. வாதப் பிரதிவாதங்களைப் பொறுத்து சில வேளைகளில் ஒரே நாளிலும் அது நடைபெற்றது; அடுத்தடுத்த நாட்களிலும் நடைபெற்றது.

அதனடிப்படையில் இன்று ராம் லல்லா தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் எடுத்து வைத்த வாதம்:

“ராமர் பிறந்த பிரசவ அறை எங்கே இருக்கிறது போன்ற, விசாரணை நீதிமன்றத்தில் கேட்க வேண்டிய கேள்விகளை இங்கு கேட்டு முஸ்லிம் தரப்பினர் இவ்வழக்கை வேறு திசைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர்.

ஈத்காவை இடித்துத்தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டதா? இதுதான் அவர்களுடைய வழக்கா?

(அதாவது, முந்தைய தினங்களில் நடந்த வாதத்தில், அகழாய்வின் போது ஒரு சுவர் கிடைத்ததாக நீதிமன்றம் கூறவே, அப்படியானால் அது ஈத்கா சுவராக இருக்கும் என மீனாட்சி குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு நீதிபதிகள், “அப்படியானால் பாபரி பள்ளிவாசலுக்கு கீழே இருந்தது ஈத்காவா எனக் கேட்டிருந்தார்கள்)

“இதை நான் ஏன் கேட்கிறேன் என்றால், முஸ்லிம் தரப்பு வாதப்படி, காலி இடத்தில் பள்ளிவாசல் கட்டியதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் 1989ல் நாங்கள் தாக்கல் செய்த மனுவில் கோவிலை இடித்துப் பள்ளிவாசல் கட்டப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளோம்” என்றார் வைத்தியநாதன்.

இதற்கு பதிலளித்த தவான், “அகழாய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே வழக்கு பயணித்துக் கொண்டிருந்ததால் நாங்கள் இந்த வாதத்தை முன்வைத்தோம்” என்றார்.

“ஈத்கா என்பது ஊருக்கு வெளியே உருவாக்கப்படும். கோயில் என்பது ஊருக்குள் கட்டப்படும். ஆகவே, இது கோவில் சுவராகும்.  28 இடங்களில் சுவர்கள் காணப்பட்டதாக தொல்லியல் ஆய்வு கூறுகிறது. அவையனைத்தும் அறைகளாக இருக்கலாம். அகழாய்வு குறித்து முஸ்லிம் தரப்பு ஆட்சேபம் தெரிவிக்கின்றது; குற்றம் சுமத்துகிறது. ஆனால் இந்த அகழாய்வு நிபுணர்கள் தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளால் அழைக்கப்பட்டு அங்கு சிறந்ததொரு பணியை அவர்களுக்கு செய்து கொடுத்தார்கள்” என்றார் வைத்தியநாதன்.

அப்படியானால் இந்த அகழாய்வு கையெழுத்து நிபுணர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட வேண்டும் என்றார் மீனாட்சி அரோரா.

அக்டோபர் 1 -முப்பத்தைந்தாம் நாள்

ராம் லல்லா சார்பாக மூத்த வழக்கறிஞர் பராசரின் வாதம்: ராமர் சிலை என்பதை சட்டப்பூர்வமான நபரா என்பதை இந்து சட்டத்தின் பார்வையில் பார்க்க வேண்டும். ரோம நாட்டுச் சட்டங்களையும், ஆங்கிலேய சட்டங்களையும் வைத்து இதனை அளவீடு செய்வது தேவையற்றது என்றார்.

இந்து மதத்தில் இறுதிக் கடவுள் என்பவர் மிக உயர்ந்த ஒருவராகிறார். இருந்த போதிலும், அந்தக் கடவுள் பல்வேறு விதங்களில், பல்வேறு முறைகளில் பல்வேறு கோவில்களில் வழிபாடு செய்யப்படுகிறார்” ஆகவே சிலை வழிபாடு என்பது இந்து மத நம்பிக்கையாகும்” என்றார்.

அக்டோபர் 3 -முப்பத்தாறாம் நாள்

வைத்தியநாதன் வாதம்: சுட்ட சுண்ணாம்பினை (லிவீனீமீ-suக்ஷீளீலீவீ னீவீஜ்tuக்ஷீமீ) கட்டிடம் கட்டுவதற்கு கலவையாக பயன்படுத்தும் முறை இந்தியாவில் இஸ்லாமியர்கள் காலத்திலிருந்துதான் வந்தது என்பது தவறாகும். அதற்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கலவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே கங்கைப் படுகையில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது என்பதை குசாம்பியில் நடந்த அகழாய்வு தெரிவிக்கின்றது. இக்கலவை இந்தியாவில் உருவான பூர்வீக தயாரிப்பாகும். இது மத்திய ஆசியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதல்ல” என்றார்.

(லிவீனீமீ-suக்ஷீளீலீவீ னீவீஜ்tuக்ஷீமீ – லைம் சுர்க்கி மிக்சர். லைம் என்றால் சுண்ணாம்பு. சுர்க்கி என்பது பாரசீக வார்த்தையாகும். சுர் பாரசீக மொழியில் சிவப்பு என்று பொருள். அதாவது, சுட்ட செஞ்சுண்ணாம்புச் சாந்து என்பது இதன் அர்த்தமாகும். கட்டிடங்கள் கட்டுவதற்கு தற்போது சிமிண்ட் கலவை பயன்படுத்துவது போல முந்தைய காலத்தில் இந்த சுட்ட சுண்ணாம்புக் கலவை பயன்படுத்தப்பட்டு வந்தது)

“அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சுவர்கள் புத்த விகாரங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தும் வடிவமைப்பை கொண்ட மாதிரியை ஒத்துள்ளதாக கூறப்படுகிறதே. அப்படியானால், இக்கலவை புத்த விகாரங்களுடன் தொடர்பற்றவை என்பதற்கான ஆதாரம் உங்களிடம் உண்டா? என நீதிபதிகள் கேட்டனர்.

அதற்கு வைத்தியநாதன், “இந்துக்கள் ராமர் பிறந்த இந்த இடத்தை நூற்றாண்டுகளாக தங்கள் கை வசம் வைத்திருக்கிறார்கள். ராமர் பிறந்த இடம் புத்த விகாரத்துடன் எந்த விதத்திலும் தொடர்புடையதல்ல. இது இந்து மத நம்பிக்கை சம்பந்தப்பட்டது” என்றார்.

“நம்பிக்கை என்பது வேறு; ஆனால் இங்கே நாம் ஆதாரங்களைப் பற்றி பேச வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்” என்றனர் நீதிபதிகள்.

கலாச்சாரங்களையும் ஆதாரங்களையும் எழுத்து வடிவில் பதிவு செய்வது என்பது மேற்கத்திய வழக்கமாகும். ஆனால் இந்திய வழக்கம் கலாச்சாரங்கள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையிலானதாகும். ஆகவே இது தொடர்பான பல்வேறு விஷயங்களில் மேற்கத்திய வல்லுநர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களின் கருத்துகளை நாம் ஏற்க முடியாது.

அந்தந்தக் கால கட்டத்தில் நிலவி வரும் பழக்க வழக்கங்களை, வழிபாடுகளை, சரித்திரங்களை வாய் வழி வார்த்தைகளாகப் பதிவு செய்யும் வழிமுறையை (ளிக்ஷீணீறீ பிவீstஷீக்ஷீஹ்) நாம் புறந்தள்ளி விட முடியாது. அப்படியானால், குர்ஆனும் ஹதீஸ்களும் கூட வாய் மொழியாகக் கூறப்பட்டு, பின்னர் பதிவு செய்யப்பட்டவை தானே” என்றார் வைத்தியநாதன்.

இந்து தரப்பினரின் மற்றொரு மனுதாரர் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.எஸ். நரசிம்மா, “8ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஸ்கந்தபுராணம் ராமர் பிறந்த இடத்தை பற்றி குறிப்பிடுகின்றது. புண்ணிய பூமிகளைத் தரிசிப்பது இந்துக்களின் மதச் சடங்காகும். மேலும், இது மோட்சத்திற்கான வழியாகும் என்பது இந்து மத நம்பிக்கை. ஆகவே, ராமர் பிறப்பிடம் என்பதற்கு இதுவே ஆதாரமாகும்” என்றார்.

அக்டோபர் 4 -முப்பத்தேழாம் நாள்

சி.எஸ். வைத்தியநாதன் முஸ்லிம் தரப்பினரின் வாதத்துக்கு தனது எதிர்வாதத்தை முன் வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது: வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையின்போது, அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில், மஸ்ஜித் எழுப்பப்படுவதற்கு முன் எந்தக் கட்டடமும் இல்லை என்று தெரிவித்தனர். பின்னர், அந்த இடத்தில் முஸ்லிம்கள் வழிபடும் சுவர் ஒன்று இருந்ததாகத் தெரிவித்தனர். அவர்கள் கூறுவதில் உண்மையேதுமில்லை.

அந்த இடத்தில் பாபர் மஸ்ஜித் எழுப்பப்படுவதற்கு முன் ராமர் கோயில் இருந்ததற்கு சந்தேகத்துக்கு இடமில்லாத ஆதாரம் உள்ளது. அந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த அகழாய்வில் வட்ட வடிவத் தூண்களும், அதற்கான தளங்களும், குறுக்குச் சுவர்களும் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றின் மூலம் அங்கு கோயில் இருந்ததும், அதை இடித்தே மஸ்ஜித் எழுப்பப்பட்டதும் தெளிவாகிறது என்று வாதிட்டார்.

இதையடுத்து, முஸ்லிம் தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன், “இந்தியத் தொல்லியல் துறையின் அறிக்கைப்படி மஸ்ஜித் எழுப்பப்பட்ட இடத்தில் கோயில் இருந்தது என அறுதியிட்டு தெரிவிக்கப்படவில்லை” என்றார்.

இதையடுத்து, முஸ்லிம் தரப்பினரின் வாதத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், சில ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இந்து தரப்பினர் முயன்றனர். இதற்கு முஸ்லிம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள், “அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருவதால், புதிய ஆவணங்கள் எதையும் இந்தக் கட்டத்தில் சமர்ப்பிக்கலாம் என்பது அர்த்தமல்ல. இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியே இதை அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது” என்றனர்.

கடந்த காலங்களில் நடைபெற்ற கலவரச் சம்பவங்களையும், பாபரி பள்ளிவாசலின் மீது நடத்தப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளையும் (மிறீறீமீரீணீறீவீtவீமீs) தவான் வாதிட்டார்.

அதற்கு வைத்தியநாதன், “இவ்வாறு கூறுவதன் மூலம் நீங்கள் மத ரீதியான உணர்வுகளைத் தூண்டி விட்டு பிரிவினையை ஏற்படுத்துகிறீர்கள். நீங்கள் கூறியது தீங்கான விளைவுகளை ஏற்படுத்துக்கூடியதாகும் (விவீsநீலீவீமீஸ்ஷீus); துரதிஷ்டவசமானதாகும் (ஹிஸீயீஷீக்ஷீtuஸீணீtமீ)” என கூறினார்.

அதற்கு தவான், “சட்டவிரோத நடவடிக்கைகள் இவ்வழக்கை தீர்மானிப்பதற்கான மையப் பிரச்சனையாகும்.  மத ரீதியிலான பிளவை ஏற்படுத்தியது என ஏதாவது ஒன்று இருந்தால், அது 1992 டிசம்பர் 6 அன்று பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட நிகழ்வேயாகும்” என்றார்.

மேலும் தவான், “நம்பிக்கை, ஆன்மீகம், புனிதத்தன்மை (ஙிமீறீவீமீயீ, sஜீவீக்ஷீவீtuணீறீவீtஹ் ணீஸீபீ sணீநீக்ஷீமீபீ) இவைதான் இந்த நிலப் பிரச்சனையைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணிகள் என்றால், இதே போன்று இஸ்லாமியர்களுக்கு இருக்கும் நம்பிக்கை, ஆன்மீகம், புனிதத்தன்மை ஆகியவையும் இதற்குப் பொருத்தும். அப்படியானால் அதையும்  நீங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதை யாரும் மறுக்கவில்லை. பாபர் மஸ்ஜித் இருந்த மைய கோபுரத்தின் கீழேதான் பிறந்தார் என்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்தியா பன்முக நாகரீகங்களை (விuறீtவீ-நீவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ ஷிtணீtமீ) தன்னகத்தே கொண்டுள்ள ஒரு நாடாகும். ஆனால், ஒரே ஒரு (இஸ்லாமிய) நாகரீகத்தின் மீது மட்டும் இப்போது கடும் அழுத்தம் (ஷிtக்ஷீமீss ஷீஸீ ஷீஸீமீ நீவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ) பிரயோகிக்கப்பட்டுக்  கொண்டிருக்கின்றது.

இஸ்லாமியர்களுக்கிற்கெதிராக இன்று ஒரு பகைமை உணர்வு, மனப்பான்மை (சிமீக்ஷீtணீவீஸீ ணீஸீவீனீஷீsவீtஹ்) உருவாகப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஒரு விஷயத்தை இவ்வுலகம் தெளிவாக மறந்து விட்டது. அது என்னவெனில், இஸ்லாமிய தத்துவவியலாளர்கள் இல்லாமல் மேற்கத்திய அறிவியல் உலகமே இல்லை என்பதை அனைவருமே மறந்து விட்டனர்” என்று கூறினார்.

புதிய காலக்கெடு

அக்டோபர் 18க்குள் வாதத்தை முடிக்க வேண்டும் எனக் கூறியிருந்த நீதிமன்றம் இன்று ஒரு நாளைக் குறைத்து 17ம் தேதி தான் கடைசி. அதற்குள் உங்கள் அனைவருடைய வாதங்களையும் முடித்துக்கொள்ள வேண்டும் என புதிய காலக்கெடுவை விதித்தது. இது அனைவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

அக்டோபர் 14 -முப்பத்தெட்டாம் நாள்

8 நாட்கள் தசரா பண்டிகை விடுமுறைக்குப் பிறகு நீதிமன்றம் இன்று கூடியது.

பாபரி மஸ்ஜித் இருந்த நிலம் செல்லத்தக்க ஒரு வக்ஃபு நிலம் அல்ல. இதனை வக்ஃபு செய்த போது ஷரீயத் சட்டத்தின் கோட்பாடுகள் பின்பற்றப்படவில்லை என முந்தைய தினங்களில் இந்து தரப்பினர் எடுத்து வைத்த வாதத்திற்குப் பதிலளித்த தவான், “ஒவ்வொரு முறையும் புதிய அரசு அதிகாரத்திற்கு வரும் போது, அதற்குத் தகுந்தாற்போன்று வரலாறு திருத்தி எழுதப்படும் என்பதற்கிணங்க நீதிமன்றத்தின் நடவடிக்கைகள், போக்குகள் மற்றும் செயல்படும் தன்மை அமைந்து கொண்டிருக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தின் அடிப்படையில் திருமணம், சொத்து விவகாரம், வாரிசுரிமை, வக்ஃபு மற்றும் இன்ன பிற மத விஷயங்கள் ஆகியவற்றில் தெளிவாகப் பிரித்தறியக்கூடிய அதிகாரம் இந்திய நீதிமன்றங்களுக்கு இருக்கும்போது, அதை விட்டு விட்டு, ஆட்சியாளர்கள் சட்டப்பூர்வமான செயல்பட்டார்களா? படையெடுப்புகளின்போது என்ன நிகழ்ந்தது? இஸ்லாமிய நாடுகளில் ஆட்சிமுறை எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றது என்று அதனை நோக்கிப் பயணிக்குமேயானால், 15 நூற்றாண்டுகளாக நிலவி வரும் இஸ்லாமிய வரலாறு, சட்டங்கள் மற்றும் மத நம்பிக்கை ஆகியவற்றின் மூலங்களைக் குறித்து ஒரு தீர்க்கமான, தெளிவான, நுட்பமான பகுப்பாய்வு நடத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

வழக்கில் நீங்கள் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறீர்களோ அதை வைத்துத்தான் வருங்கால வரலாற்றுப் புத்தகங்களில் சரித்திரம் எழுதப்படும்.

பள்ளிவாசலின் கீழே மிகப் பெரிய ஒரு கட்டிடம் இருக்கிறது என தொல்லியல் துறை கூறுகின்றது. ஒருவேளை 450 வருடங்கள் கழித்து நீங்கள் அந்த இடத்தைத் தோண்டி அங்கே சில கட்டிடச் சிதைவுகளைக் கண்டெடுத்தால் பள்ளிவாசலை சட்ட விரோதமாக்கி விடுவீர்களா? என்னுடைய (முஸ்லிம்களுடைய) நில உரிமையை நீங்கள் இந்த வழியில் (அடிப்படையில்) தீர்மானிக்க முடியாது.

படையெடுப்பின் வாயிலாக நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன என்று கூறுவது இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் இது மிகுந்த ஆபத்தான வாதமாகும். ஒருவேளை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அங்கெல்லாம் படையெடுப்புகள் நிகழ்ந்திருந்தபோதிலும், இதுபோன்ற ஆபத்தான வாதங்களை “செல்லுபடியாகாது; ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறி  புறந்தள்ள வேண்டும்.

1947 – 50 க்குப் பிறகு மத ஆலயங்கள் தகர்க்கப்பட்ட செயலை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும். இதுதான் மிகவும் பாதுகாப்பான வகையிலான சட்டத் தீர்வு முறையாகும் (ளிஸீறீஹ் sணீயீமீ ஜீக்ஷீஷீஜீஷீsவீtவீஷீஸீ ஷீயீ றீணீஷ்).

ஆலயங்கள் தகர்க்கப்பட்டதன் மூலம் அவற்றை இடித்தவர்களுக்கு கிடைக்கும் எந்தவொரு பலனும் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட வேண்டும்.

பாபரி பள்ளிவாசல் ஷரீஅத் சட்டத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம். அதனை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டதால் பள்ளிவாசலுக்கான தன்மையை அது இழந்து விட்டதாகக் கருத முடியாது.

ஒரு திறந்த வெளியிலும் பள்ளிவாசல் அமைய முடியும். ஆகவே (கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டாலும்) பாபரி பள்ளிவாசல் இருந்த இடம் இப்போதும் அது பள்ளிவாசல்தான்.

பள்ளிவாசல் ஒருமுறை கட்டப்பட்டு விட்டால் அது எப்போதும் பள்ளிவாசல்தான். அங்கு பல காலமாக தொழுகை நடைபெறாவிட்டாலும், அந்த இடம் பள்ளிவாசல் என்ற தன்மையை இழந்து விடுவதில்லை.

அவர்களுடைய (இந்து தரப்பினரின்) மொத்த பிரச்சாரங்களும் இதன் அடிப்படையில் அமைந்திருந்த போதிலும் பள்ளிவாசலுக்கு கீழேதான் ராமர் பிறந்தார் என்பதை நிரூபிக்க இந்து தரப்பினர் தவறிவிட்டனர்.

ஆகவே, 1992 டிசம்பர் 5ம் நாள் பாபரி பள்ளிவாசல் அங்கு எப்படி நிலைபெற்றிருந்ததோ, அதேபோன்று அந்த இடத்தில் மீண்டும் அதனைக் கட்டியெழுப்ப வேண்டியது நம் அனைவரின் மீது சுமத்தப்பட்ட கடமையாகும்” என்று கூறினார்.

அக்டோபர் 15 -முப்பத்தொன்பதாம் நாள்

ராஜீவ் தவான் வாதம்: ‘அயோத்தியிலுள்ள நிலப் பகுதிக்குள் நுழைவதற்கும், அங்கு வழிபாடு நடத்துவதற்கும் இந்துக்களுக்கு மட்டுமே நீண்ட காலமாக உரிமை இருந்து வந்தது. அந்த இடத்தைச் சொந்தம் கொண்டாடுவதற்கு இந்த உரிமை மட்டும் போதாது’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘அந்தப் பகுதிக்குள் நுழைந்து வழிபாடு நடத்த இந்துக்களுக்கு மட்டுமே உரிமை இருந்ததாக நீங்கள் (முஸ்லிம் தரப்பு) கூறுகிறீர்கள். அந்த இடத்துக்குச் சொந்தம் கொண்டாடும் உங்களின் கோரிக்கைக்கு எதிராக உங்கள் வாதம் உள்ளதே?’’ என்று கேள்வி எழுப்பினா.

இதற்கு பதிலளித்த ராஜீவ் தவான், ‘‘இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு விஷயத்தை நான் கூந்து கவனித்தேன். முஸ்லிம் தரப்பினரிடம் மட்டுமே நீதிபதிகள் கேள்வி எழுப்புகின்றனர். இந்து தரப்பினர் வாதிடுகையில், நீதிபதிகள் கேள்வி எழுப்புவதில்லை. அவர்களிடமும் நீதிபதிகள் கேள்வி எழுப்ப வேண்டும்’’ என்றார்.

அதற்கு வைத்தியநாதன், ‘‘இந்த வாதம் தேவையற்றது’’ என்று ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து ராஜீவ் தவான், ‘‘இது தேவையற்ற வாதமல்ல. அனைத்து கேள்விகளும் எங்களிடம் மட்டுமே கேட்கப்படுவது ஏன் என்பதை முறையிட்டேன்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, ராஜீவ் தவனின் முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது உங்களின் கடமை’’ என்றனர்.

இறுதி நாள் வாதம்

அக்டோபர் 16 -நாற்பதாம் நாள்

காலக்கெடு அதிரடியாக மீண்டும் குறைப்பு

அக்டோபர் 17ம் தேதி கடைசி நாள் என தசரா விடுமுறைக்கு முன் வெள்ளிக்கிழமையன்று கூறிய தலைமை நீதிபதி, இன்றுடன் வாதம் நிறைவடையும்; இதுதான் கடைசி நாள் என அறிவிக்கவே அனைவரும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

மத்தியஸ்த குழு அறிக்கை தாக்கல்

இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்த குழு, சமரசப் பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகளையும், தீர்வுகளையும் அறிக்கையாக மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மத்தியஸ்த குழு அறிக்கையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்பட 5 நீதிபதிகளும் விசாரணை முடிந்ததும் ஆய்வு செய்வார்கள்.

இதனிடையே, சன்னி வக்ஃபு வாரியம் சில நிபந்தனைகளின் பேரில், நிலத்தின் மீது உரிமைகோருவதை விட்டுக் கொடுக்க சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது. முக்கியமாக, அயோத்தியில் ஏற்கெனவே உள்ள 22 மஸ்ஜித்களை அரசு புதுப்பித்துத் தர வேண்டும்; நில உரிமையை விட்டுக் கொடுப்பதால், வேறு இடத்தில் புதிய மஸ்ஜித் கட்ட அனுமதிக்க வேண்டும்  உள்ளிட்ட நிபந்தனைகளை மத்தியஸ்த குழுவிடம் முன் வைத்துள்ளதாக புரளி கிளப்பினர்.

மூடி உறையிட்ட அறிக்கையில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாத நிலையில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக கடைசி நாள் வாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே எதிர்த்தரப்பினரும் மீடியாக்களும் சேர்ந்து இந்தப் புரளியைக் கிளப்பி விட்டதாகத் தெரிய வருகிறது.

ராம் லல்லா தரப்பில் ஆஜரான கே.பராசரன் முன்வைத்த வாதம்:

‘‘இந்தியா மீது படையெடுத்து வந்த பாபர்மிகப்பெரிய வரலாற்றுப் பிழையை செய்துள்ளார். அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவர் மஸ்ஜித்தைக் கட்டினார். இதன் மூலம், தாம் விதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று அவர் நிரூபிக்க முயன்றுள்ளார். முஸ்லிம்கள் தங்களுக்கான மஸ்ஜித்தை எங்கு வேண்டுமானாலும் கட்டிக் கொள்ள முடியும். ஆனால் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் முன்பு இருந்த கோயிலை அதே இடத்தில்தான் மீண்டும் கட்ட முடியும். ஏனெனில், ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது. இப்போதும் கூட அயோத்தியில் 55 முதல் 60 மஸ்ஜித்கள் உள்ளன. ஆனால், ராமர் பிறந்த இடம் என்பது அயோத்தியில் அந்த ஒரு இடத்தில் மட்டுமே உள்ளது.

முஸ்லிம்கள் எந்த மசூதியில் வேண்டுமானாலும் தொழுகை நடத்திக் கொள்ள முடியும். ஆனால், ராமர் பிறந்த இடம் என்பது இந்துகளுக்கு மிகவும் புனிதமானது’’.

இதையடுத்து, நீதிபதிகள் பராசரனிடம் சரமாரியாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

முக்கியமாக, ஓரிடத்தில் மஸ்ஜித் கட்டப்பட்டுவிட்டால், அது எப்போதும் மஸ்ஜித்தான் என்று முஸ்லிம் தரப்பு கூறும் வாதத்தை நீங்கள் ஏற்கிறீர்களா என்று பராசரனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இல்லை. அவர்கள் தரப்பு வாதத்தை நான் ஏற்கவில்லை. கோயில் ஒன்று கட்டப்பட்டுவிட்டால், அது எப்போதும் கோயில்தான் என்பதே எனது கருத்து” என்றார்

இதன் பிறகு, நாங்கள் தேவையான அளவுக்கு இந்து தரப்பினரிடம் கேள்விகளை எழுப்பிவிட்டோம் என்று கருதுகிறீர்களா? என்று முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவானிடம் நீதிபதிகள் கேட்டனர்.

முன்னதாக, அயோத்தியில் ஏராளமான மஸ்ஜித்கள் உள்ளன என்று பராசரன் கூறியபோது, முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் தவான், “அயோத்தியில் எத்தனை அதிகமாக கோயில்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியாதா’ என்று எதிர்க்கேள்வி எழுப்பினார். அதற்கு, “ராமர் பிறந்த இடம் ஒன்றுதான்; அங்கு கோயில் அமைவது முக்கியம் என்பதை சுட்டிக்காட்டவே அந்த வாதத்தை முன்வைத்தேன்” என்று பராசரன் பதிலளித்தார்.

வைத்தியநாதன் வாதம்: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் முகலாய மன்னர் பாபர்தான் மஸ்ஜித்தை கட்டினார் என்பதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரங்களை சன்னி வக்ஃபு வாரியமும் இதர முஸ்லிம் அமைப்புகளும் நீதிமன்றத்தில் அளிக்கத் தவறிவிட்டன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை நீண்டகாலம் வைத்திருந்ததற்காக முஸ்லிம் தரப்பு உரிமை கோருகிறது. அப்படியெனில், முகலாயர் ஆட்சிக்கு முன்பு அந்த இடத்தில் இருந்த கோயில் அல்லது தெய்வம் தான் உண்மையான உரிமையாளர் என்பதை முஸ்லிம் தரப்பு ஒப்புக்கொள்ள வேண்டும், என்றார் அவர்.

நீதிபதிகள் கிண்டலாக கூறியதால் வரைபடத்தைக் கிழித்த ராஜீவ் தவான்:

இந்து மகா சபை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு ஆதாரமாக சில வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய நூல்களை மேற்கோள் காட்டினார். மேலும், தனது வாதத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் சில வரைபடங்களையும் அவர் காட்டினார். அதன் நகல் ஒன்று முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற வாதத்தின்போது, விகாஸ் சிங் முன் வைத்த வாதங்களுக்கு ராஜீவ் தவன் மறுப்பு தெரிவித்தார். மேலும், இந்த வரைபட நகலை வைத்து நான் என்ன செய்வது என்று நீதிபதிகளிடம் ராஜீவ் தவான் கேள்வி எழுப்பினார். அதற்கு, “அந்த வரைபட நகலை நீங்கள் கிழிக்கலாம்” என்று நீதிபதிகள் கிண்டலாகத் தெரிவித்தனர்.

உடனடியாக, அந்த வரைபட நகலை ராஜீவ் தவான் நீதிமன்ற அறையில் கிழித்து எறிந்தார். இது, நீதிமன்றத்தில் கூடியிருந்த அனைவருக்கும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நீதிமன்ற மாண்பைக் காக்க வேண்டும் என்று எச்சரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினால் எழுந்து சென்று விடுவேன்” என்றார். அதைத் தொடர்ந்து அமைதியான முறையில் வாதங்கள் நடைபெற்றன.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. மேலும் வழக்கில் சுமூகத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை மூன்று தரப்பினரும் மூடி முத்திரையிட்ட தாளில் ஆவணங்களாக மூன்று நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதைத் தொடர்ந்து, இந்து தரப்பினரில் சிலர் தங்கள் ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி சனிக்கிழமையன்று  எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். உ.பி. சன்னி வக்ஃபு வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் தரப்பினர், அக்டோபர் 20ம் தேதி தாக்கல் செய்தனர்.

அதே நாளில் வழக்கில் தொடர்புடைய பல்வேறு தரப்பினருக்கும் அந்த ஆவணத்தின் நகலை அனுப்பி வைத்தனர். அத்துடன் பொது வெளியிலும் அவர்கள் வெளியிட்டனர்.

இதனால், அவர்களின் ஆவணங்களைப் பெறுவதற்கு நீதிபதிகள் அமர்வு மறுப்பு தெரிவித்து விட்டது. இந்நிலையில், முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் ஒருவர் தங்களது கருத்தை நீதிபதிகள் அமர்விடம் தெரிவித்தார். இதையடுத்து,  முஸ்லிம் தரப்பினர் தாக்கல் செய்த ஆவணங்களை ஏற்றுக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அக்டோபர் 23 ஆவணங்கள் தாக்கல் செய்ய இந்து தரப்பினருக்கு அனுமதி

செவ்வாய்க்கிழமை ஆஜரான நிர்மோஹி அகாரா தரப்பு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, எழுத்துப்பூர்வ ஆவணங்களைத் தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட 3 நாள் அவகாசத்தை எனது தரப்பினர் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டனர். எனவே, அந்த ஆவணங்களைத் தற்போது தாக்கல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வ ஆவணங்களைத் தாக்கல் செய்ய நிர்மோஹி அகாரா தரப்புக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

நவம்பர் 9 தீர்ப்பு தினம்

மறுக்கப்பட்ட நீதி

மறுநாள் காலை நவம்பர் 9ம் அன்று இறுதித் தீர்ப்பை வாசித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாபரி மஸ்ஜித் இருந்த சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே எனத் தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு விவரம்

1,045 பக்கங்களை கொண்ட தீர்ப்பில் 925வது பக்கம் முதல் 928வது பக்கம் வரை இவ்வழக்கிற்கான பரிகாரங்களும் உத்தரவுகளும் கீழ்கண்டவாறு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

  1. (வீ) நிர்மோஹி அகாரா அமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனு எண் 3 கால வரம்புச் சட்டத்திற்கு உட்பட்டு தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

(வீவீ) சன்னி வக்பு வாரியத்தாலும் தாக்கல் செய்யப்பட்ட மனு எண் 4 மற்றும் மற்ற வாதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் காலவரம்புச் சட்டத்திற்கு உட்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனு எண் 4 கால வரம்புச் சட்டத்திற்கு உட்பட்டு தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி அதனை செல்லாது எனத் தீர்ப்பளித்த (அலகாபாத்) உயர்நீதிமன்றத் தீர்ப்பு தள்ளுபடி செய்யப்படுகின்றது. (ஆகவே இம்மனு செல்லுபடியாகும் என இதற்கு அர்த்தம்)

(வீவீவீ) (ராமர் சிலை சார்பாகத் தொடுக்கப்பட்ட) மனு எண் 5 கால வரம்பிற்கு உட்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (ஆகவே, இந்த மனுவும் செல்லுபடியாகும்)

  1. முதல் வாதியான ராமர் சிலையுடைய கட்டளையின் பேரில் மூன்றாவது வாதி தாக்கல் செய்த மனு எண் 5 செல்லுபடியாகும். இம்மனுவின் ‘தீர்வு வேண்டுகோள்’ (றிக்ஷீணீஹ்மீக்ஷீ சிறீணீusமீs) குறித்த பகுதியில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவகளின் அடிப்படையில்கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

(வீ) இந்தத் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து மூன்று மாதத்திற்குள், அயோத்தியா நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1993ன் பிரிவுகள் 6 மற்றும் 7 வழங்கியுள்ள அதிகாரத்தின் படி, மத்திய அரசு ஒரு செயல்திட்டத்தை (ஷிநீலீமீனீமீ) வகுக்க வேண்டும். இத்திட்டத்தின்படி பிரிவு 6 ன் அடிப்படையில் அரசு ஒரு அறக்கட்டளையை உருவாக்க வேண்டும். அதில் உறுப்பினர்கள் குழுவை நியமிக்க வேண்டும். ட்ரஸ்ட் நிர்வாகம் மற்றும் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான சட்டப்பிரிவுகள் அந்த ட்ரஸ்ட் பைலாவில் இடம் பெற வேண்டும். கோயில் கட்டுமானம் தொடர்பான தற்போதைய தேவைகள் மற்றும் எதிர்காலத் தேவைகள் ஷரத்துக்கள் குறித்து இதில் இடம் பெற வேண்டும்.

(வீவீ) (பாபரி மஸ்ஜித் நிலைபெற்றிருந்த) சர்ச்சைக்குரிய நிலப்பகுதியான (மிஸீஸீமீக்ஷீ சிஷீuக்ஷீtஹ்ணீக்ஷீபீ) 2.77 ஏக்கர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏற்கெனவே மத்திய அரசு கையப்படுத்தி தன்வசம் வைத்திருக்கும் நிலம் 67 ஏக்கர் நிலம் (ளிutமீக்ஷீ சிஷீuக்ஷீtஹ்ணீக்ஷீபீ) ஆகியவற்றை ட்ரஸ்ட் நிர்வாகத்திடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும். மேற்கூறிய எங்கள் உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக, தன் வசம் உள்ள நிலத்தை ட்ரஸ்ட் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக அந்த செயல் திட்டத்தில் தேவையான சட்டப் பிரிவுகளை இடம் பெறச் செய்வது குறித்து முடிவு செய்வதற்கு மத்திய அரசுக்கு முழு சுதந்திரம் / அதிகாரம் உண்டு. ஆகவே அதனடிப்படையில் அரசு செயல்பட வேண்டும்.

(வீவீவீ) அயோத்தியா சட்டம் பிரிவு 6ன் படி தன் கைவசம் உள்ள நிலத்தை ட்ரஸ்ட் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் வரை, அந்த நிலத்தின் மீதான அதிகாரம் மத்திய அரசிடமே இருக்கும்.

  1. (வீ) சர்ச்சைக்குரிய நிலத்தை ஷரத்து 2ன்படி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் அதே வேளையில் மனு எண் 4ன் வாதியான சன்னி வக்பு வாரியத்திற்கு அவர்களுக்கு ஏற்றாற் போன்ற (ணீ suவீtணீதீறீமீ ஜீறீஷீt ஷீயீ றீணீஸீபீ) 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

(வீவீ) இந்த நிலம் கீழ்க்கண்டவர்களால், கீழ்க்கண்டவாறு ஒதுக்கப்பட வேண்டும்.

(ஏ) அயோத்யா சட்டம் 1993ன் படி தன்வசம் கையகப்படுத்தி வைத்துள்ள நிலத்திலிருந்து (5 ஏக்கரை) மத்திய அரசு வழங்க வேண்டும் (அல்லது)

(பி) அவர்களுக்கு ஏற்றாற்போன்ற ஒரு பிரபலமான இடத்தில் மாநில அரசாங்கம் வழங்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் இதனை செயல்படுத்த மத்திய அரசும் மாநில அரசும் கலந்தாலோசித்து நிறைவேற்ற வேண்டும்.

(வீவீவீ) இவ்வாறு வழங்கப்பட்ட நிலத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டுபவதற்கும், அந்த பள்ளிவாசலுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளும் எடுக்க சன்னி வக்பு வாரியத்திற்கு முழு சுதந்திரம் – அதிகாரம் உண்டு.

(வீஸ்) மேற்குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளின்படி மனு எண் 4 செல்லுபடியாகும் என ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

(ஸ்) அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 142 இந்த நீதிமன்றத்திற்கு வழங்கிய அதிகாரத்தின்படி மனு எண் 4ன் வாதியான சன்னி வக்பு வாரியத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்வதற்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

  1. மத்திய அரசு செயல்திட்டத்தை வகுக்கும் போது அந்த ட்ரஸ்ட் நிர்வாகத்தில், தான் சரி எனக் கருதும் விதத்தில் நிர்மோஹி அகாராவிற்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில் அந்த செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைக்க வேண்டும்.
  2. அமைதியையும் சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காகவும், ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்காகவும் இதன் மீது உரிய அதிகாரம் படைத்த அதிகாரிகள் / அரசு விதிக்கும் எல்லாவிதமான கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு சர்ச்சைக்குரிய இடத்தில் மனு எண் 1ன் வழிபாட்டு உரிமை (இந்த நீதிமன்றத்தால்) உறுதி செய்யப்படுகிறது.

தகவல் ஆதாரம்:

உச்சநீதிமன்ற இணையதளம்

லைவ் லா இணையதளம்

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (டெல்லி)

தினமணி

வழக்கறிஞர் மௌலா அலி பாஷா, உச்சநீதிமன்றம்

Comments are closed.