பாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா?

0

பாபரி மஸ்ஜித்: நீதி நிலைநாட்டப்படுமா?

பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கு அக்டோபர் 29ஆம் தேதி முதல் விசாரணைக்கு வரவுள்ள நிலையிலும் இந்த வழக்கு தொடர்பான மற்றொரு வழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய நிலையிலும் பாபரி மஸ்ஜித் விவகாரம் மீண்டும் தேசிய தளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் ராமனை முன்னிலைக்கு கொண்டு வரும் பாரதிய ஜனதா கட்சி தற்போதும் ராமனை பிடித்து வந்து தங்களின் பிரச்சாரத்தை நடத்த தயாராகி வருகின்றது.

நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்திருந்த முஸ்லிம்களின் இறையில்லமாம் பாபரி மஸ்ஜித்தை டிசம்பர் 6, 1992 அன்று இந்துத்துவ சங்கபரிவார கும்பல் பட்டப்பகலில் இடித்து தள்ளியது. பாபரி மஸ்ஜித் இடிப்புடன் இந்தியாவின் ஜனநாயக அடித்தளங்களையும் உடைத்து நொறுக்கிய சங்கபரிவார கும்பல் உலகளவில் இந்தியாவின் பெருமையையும் சீர்குலைத்தது. இந்துத்துவ சக்திகள் ஜனநாயகத்தை கேவலப்படுத்தியதும் இந்தியாவை அவமானப்படுத்தியதும் அது முதல் முறை அல்ல, அது கடைசி முறையாகவும் இருக்கவில்லை. கடவுள் ராமன் பிறந்த இடத்தில் அமைந்திருந்த கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்று இல்லாத கதைகளையும் ஆதாரமில்லாத வரலாறுகளையும் கூறி மதவெறியை தூண்டி இறுதியில் மஸ்ஜித்தை இடிக்கவும் செய்தனர்.

டிசம்பர் 22, 1949 இரவில் இந்துத்துவ மதவெறி கும்பல் பாபரி மஸ்ஜித்தினுள் திருட்டுத்தனமாக ராமன் மற்றும் சீதையின் சிலைகளை வைத்து ராமர் அதிசயமாக காட்சி அளித்தார் என்று கேவலமாக ஒரு பொய்யை கூறும் வரை முஸ்லிம்கள் அங்கு தினமும் ஐங்கால தொழுகைகளை நடத்தியே வந்தனர். பிரச்சனையை கேள்விப்பட்டு நியாயம் கேட்டு வந்த முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். (விரிவான தகவல்களுக்கு – ‘சிலை வந்த கதை’, விடியல், டிசம்பர் 2013) பள்ளிவாசல் இடத்திற்கு உரிமை கோரி 1950ல் இருந்தே பல நீதிமன்றங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

 

Goto Index

 

Comments are closed.