பாபரி மஸ்ஜித்: வரலாறு முற்றுப்பெறுவதில்லை!

0

பாபரி மஸ்ஜித்: வரலாறு முற்றுப்பெறுவதில்லை!

மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் சிறுபான்மையின மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் இந்தியாவில் ஜனநாயகத்தின் பொருள் என்ன? சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேசத்தில் வாழும் மத சிறுபான்மையினர் இந்த கேள்வியை எழுப்பும் துயரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர் மீதான பெரும்பான்மை சமூகத்தின் ஆட்சி என்ற விளக்கத்தையெல்லாம் நாகரீக சமூகங்கள் அங்கீகரிப்பதில்லை. பெரும்பான்மை- -& சிறுபான்மை வித்தியாசமின்றி அனைத்து பிரிவு மக்களுக்கும் சம நீதி கிடைக்கும் அமைப்பு முறையாகத்தான் ஜனநாயகம் உலகில் வரவேற்கப்பட்டது. ஆனால், நமது நாட்டின் ஜனநாயகத்திற்கு மத அடிப்படையிலான புதிய அளவுகோல்களை வழங்கிக் கொண்டுதான் ஒவ்வொரு தினமும் கடந்து செல்கிறது. பெரும்பான்மை மதத்தினரின் ஆட்சியை எல்லா விதத்திலும் சகித்துக் கொண்டு வாழவேண்டியவர்களே சிறுபான்மையினர் என்ற இந்துத்துவ சித்தாந்தத்தின் தொடர்ச்சியாக, பெரும்பான்மை சமூகத்தின் மத நம்பிக்கைகளுக்கு நீதிபீடமும் கட்டுப்படவேண்டும் உள்ளிட்ட பிடிவாத கர்ஜனைகள் அண்மையில் முழங்கக் கேட்கிறோம்.

ஆறு மாதத்திற்குள் வரவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான மையக்கருவாக அயோத்தியில் ராமர் கோயிலும், ஸ்ரீராம் கோஷமும் வெளிப்பட்டு விட்டதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏராளம் இருக்கலாம். அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள நிர்வாக தோல்வியும், மலைபோல் குவிந்துள்ள ஊழல்களும் ஏற்படுத்தியுள்ள அரசு எதிர்ப்பு உணர்வை கடந்து செல்ல இந்த ஒரு துருப்புச் சீட்டு மட்டுமே அரசியல் வறட்சியில் சிக்கித் தவிக்கும் சங்கபரிவாரத்தின் கையில் உள்ளது என்ற கூற்று சரியாக இருக்கலாம். முந்தைய காலங்களில் பா.ஜ.க.வை தோல்வியின் விழும்பிலிருந்து கைத்தூக்கி விட்டதும் வெற்றிப் படிக்கட்டுகளை தொடச் செய்ததும் சிறுபான்மையினருக்கு எதிரான பெரும்பான்மை பிரிவினை வாதமே என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. ஆனால், 2014ல் நாம் கண்டதும், 2019ல் நாம் காண துவங்கியிருப்பதும் புதிய திருப்பங்களாகும். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.