பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட வழக்கு: இந்து அமைப்புகளின் புகாரால் இறுதி அறிக்கை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

0

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் 2.77 ஏக்கர் நிலத்தைப் பிரித்துக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட இப்ராஹிம் லலிபுல்லா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய சமரச குழு ஒன்றை அமைத்து அந்த குழுவிற்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்த சமரச குழு மீது நம்பிக்கை இல்லை, அந்த குழு சரியாக செயல்படவில்லை என இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், இந்த சமரச குழு ஆகஸ்ட் 15 அன்று இறுதி அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும், இந்த மாதம் 18ஆம் தேதி இடைக்கால அறிக்கை ஒன்றையும் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிடபது.

Comments are closed.