பாபர் மஸ்ஜித் வழக்கு: பாஜக தலைவர்களுக்கு 9 மாதங்களில் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

0

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் இருந்து பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இதையடுத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜக தலைவர்கள் மீதான வழக்கின் விசாரணையை 9 மாதங்களில் முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என சிறப்பு அமர்வு நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.