பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு!

0

பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கிலிருந்து பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 19 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் விடுதலை குறித்து மறு ஆய்வு செய்து 2019 ஏப்ரல் 19ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என 2017 ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இந்த மறு ஆய்வு விசாரணை இரண்டு ஆண்டுகளை கடந்துள்ள உள்ள நிலையில், லக்னோ சிறப்பு நீதிமன்றம், உச்ச நீதி மன்றத்திற்கு கடிதம் எழுதியது. “அக்கடிதத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் மேலும் 6 மாத அவகாசம் தேவை என கோரிக்கை விடுத்தது”.

இந்த கோரிக்கை உச்ச நீதிமன்றத்திற்கு வந்த போது, கால அவகாசம் வழங்குவது குறித்து உத்தர பிரதேச அரசு ஜூலை 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

Comments are closed.