பாபர் மஸ்ஜித் வழக்கு: சமரசத் தீர்வு காண முடியாததால் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0

பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை என மத்தியஸ்த குழு தெரிவித்துள்ளது.

அயோத்தியில் நீண்டகாலமாக நிலவிவரும் பாபர் மஸ்ஜித் மற்றும் ராமர் கோவில் பிரச்சனையில் சமரச தீர்வை காண்பதற்காக கடந்த மார்ச் மாதம் மத்தியஸ்தர்கள் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. 

இக்குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமை வகித்தார். இக்குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 

இதனிடையே மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்தியஸ்தர் குழு மேற்கொண்ட சமரச முயற்சியில் தீர்வு காண முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இவ்வழக்கை ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றமே விசாரிக்கும் என நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்துள்ளார். வரும் 6ஆம் தேதி முதல் வழக்கு தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும்  தெரிவித்தார்.

Comments are closed.