பாபு பஜ்ரங்கிக்கு மூன்று மாத ஜாமீன்

0

குஜராத் 2002 இனப்படுகொலையின் போது நரோடா பாட்டியா பகுதியில் நடைபெற்ற கொலைகளுக்காக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு ஆகஸ்ட் 2012ல் சிறப்பு நீதிமன்றம் ‘மரணம் வரை சிறைவாசம்’ அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த படுகொலையில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று, பாபு பஜ்ரங்கிக்கு மூன்று மாத ஜாமீனை நீதிமன்றம் வழங்கியுள்ளது. கண் சிகிச்சை செய்வதற்காக ஜாமீன் வழங்க வேண்டும் என்று பஜ்ரங்கியின் மனைவி சமர்ப்பித்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ரவி திரிபாதி மற்றும் ஆர்.டி. கோத்தாரி ஆகியோர் அவருக்கு ஜாமீன் வழங்கினர்.
பஜ்ரங்கிக்கு இதுவரை ஐந்து முறை தற்காலிக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனக்கு வழங்கப்பட்ட தீர்;ப்பை எதிர்த்து பஜ்ரங்கி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளான். ஆனால் உச்சநீதி மன்றம் அந்த மனுவை நிறுத்தி வைத்துள்ளது.

Comments are closed.