பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை

0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு: ரிபப்ளிக், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிகளுக்கு தேசிய ஒளிபர்ப்பு ஒழுங்கு ஆணையம் கடும் எச்சரிக்கை

 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது அவதூறு செய்திகளை பரப்பி வந்த டைம்ஸ் நவ், இந்தியா டுடே, ரீபப்ளிக் ஆகிய செய்தி நிறுவனங்களுக்கு தேசிய ஒளிபரப்பு ஒழுங்கு ஆணையம்(NBSA) கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

முன்னதாக குறிப்பிட்ட இந்த செய்தி நிறுவனங்கள், சட்டப்படியும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டும் செயல்பட்டுவரும் தங்கள் இயக்கத்தின் மீது அவதூறு செய்திகளை பரப்பி மக்களிடம் தங்களைக் குறித்த தவறான அபிப்பிராயம் ஏற்படுத்த முயல்வதாக தேசிய ஒளிபரப்பு ஒழுங்கு ஆணையத்திடம் புகாரளித்திருந்தது.

இந்நிலையில் டைம்ஸ் நவ் மற்றும் ரீபப்ளிக் டிவி ஒளிபரப்பிய செய்தித் தொகுப்புகளை கண்டு எரிச்சலடைந்த தேசிய ஒளிபரப்பு ஒழுங்கு ஆணையம், இந்த செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டது போல பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெறுப்புகளை பரப்பும் இயக்கம் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும் அந்த இயக்கத்திற்கு எதிராக ஒரே ஒரு குற்றப்பத்திரிக்கை தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் எந்த அரசும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தீவிரவாத இயக்கம் என்றோ சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இயக்கம் என்றோ அறிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், “இதனால், இவ்விஷயத்தில் நடுநிலை தவறாமல் சார்புநிலையில் இல்லாமல் செய்திகளை நேர்மையாக ஒளிபரப்பவேண்டும் என்ற தேசிய ஒளிபரப்பு விதிமுறைகளை இந்த தொலைக்காட்சிகள் மீறியுள்ளன.”என்று தேசிய ஒளிபரப்பு ஒழுங்கு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற விசாரணையில் உள்ள விஷயங்கள் குறித்து ஒளிபரப்பும் போது மிக கவணமாக இருக்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குறைய ஹாஸ்டாக்குகள் மூலம் ஊடக விசாரணைகளில் இந்த ஊடகங்கள் ஈடுபடக்கூடாது என்றும் இந்த தொலைக்காட்சிகளை NBSA எச்சரித்துள்ளது.

இன்னும் குறிப்பிட்ட அந்த செய்தித் தொகுப்பின் காட்சிகள் டைம்ஸ் நவ் இணையதளத்திலோ, அதன் யூடியூப் பக்கத்திலோ இருக்குமேயானால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் NBSA உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்டாய மதமாற்றம் செய்கிறது என்று ரகசிய ஸிட்டிங்க் ஆபரேஷன் மூலம் கண்டறிந்ததாக கூறிய இந்தியா டுடே தொலைக்காட்சி, அதன் கூற்றை உண்மைப்படுத்தக் கூடிய அனைத்து ஆதாரங்களையும் சம்ற்பிக்க வேண்டும் என்றும் NBSA தெரிவித்துள்ளது.

Comments are closed.