பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை!

0

பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை!

சர்ச்சைக்குரிய வீடியோ செய்திகளை நீக்க உத்தரவு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம்(News Broadcasting Standards Authority – NBSA)

வெளியிட்ட முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவில் பாப்புலர் ஃப்ரண்ட் குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்ட ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ், இந்தியா டுடே, ஆஜ் தக் ஆகிய நான்கு செய்தி சேனல்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அந்த உத்தரவில் சேனல்கள் இது தொடர்பான செய்திகளை தங்களது இணையதளங்கள், யூ- ட்யூப் மற்றும் வேறு எந்தெந்த இணையதளங்களிலெல்லாம் இந்த வீடியோ காட்சிகள் உள்ளனவோ அந்த இணைப்புகளையும் நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஒளிபரப்பாளர்கள் தவறான தகவல்களை செய்திகளாக வெளிட்டுள்ளனர், இது நெறிமுறைகள், ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள், செய்தி அறிக்கைகளில் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை கடைப்பிடித்தல், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செய்தி அறிக்கைகளுக்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் விதிகளை மீறுவதாக என்.பி.எஸ்.ஏ. கண்டறிந்துள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.