பாப்புலர் ஃப்ரண்ட் தடை கோரிக்கை உண்மையல்ல: கேரள முதல்வர் அலுவலகம் மறுப்பு

0

பிரபல நாளிதழான தி இந்து பத்திரிகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய மத்திய அரசிடம் கேரள அரசு வேண்டுகோள் வைத்ததாக செய்தி வெளியானது. இந்த செய்தியின்படி கடந்த ஜனவரி 6 மற்றும் 7 ஆம் தேதி நடைபெற்ற வருடாந்திர காவல்துறை டிஜிபி மாநாட்டில் கேரள டிஜிபி லோக் நாத் பெஹ்ரா இந்த வேண்டுகோளை வைத்ததாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு கேரள அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து வெளியான கடிதத்தின் அடிப்படையில், பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பை தடை செய்யக் கோரி கேரள டிஜிபி வேண்டுகோள் விடுத்ததாக மாநில உள் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு கூறிய இந்த கருத்து அடிப்படையற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத விவகாரம் நீதிமன்றத்தில் வந்த போதும் கூட கேரள அரசு அவ்வியக்கத்தை தடை செய்யும் நிலைபாட்டிற்கு ஆதரவாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது PFI யோ அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்போ, ஒரு மதத்துடன் தொடர்புடைய ஒரு அமைப்பை தடை செய்வது மேலும் பல மத மோதல்களுக்கு வழிவகுக்கும் என்று கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்பை விட பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்புடைய வழக்குகள் தற்போது வெகுவாக குறைந்துள்ளது என்றும் இந்த நிலையில் ஒரு இயக்கத்தின் மீது தடை வித்திக்க முடியாது என்றும் கேரள டிஜிபி பெஹ்ரா தெரிவித்துள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் மீதான தடைக்கு அவ்வமைப்பு மீது தொடரப்பட்ட நான்கு வழக்குகள் காரணமாக காட்டப்படுகின்றன. அதில் நபிகளாரை அவமதித்த கேரள பேராசிரியர் ஜோசப் அவர்களின் கை வெட்டு வழக்கும் அடக்கம்.

Comments are closed.