பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கோடை கால பயிற்சி முகாம்

0

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கோடை கால பயிற்சி முகாம்

இஸ்லாத்தில் கடமைகள் இரண்டு வகைப்படும். ஒன்று இறைவனுக்கு செய்ய வேண்டியவை மற்றொன்று மனிதனுக்கு செய்ய வேண்டியவை. இதில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அதிகம் போதிக்கப்படுகின்றன. ஆனால் மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் குறைவாகவே போதிக்கப்படுகிறது. இவ்விரு கடமைகளையும் ஒவ்வொருவரும் சரிவர புரிந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இளைய தலைமுறைக்கும் இது கற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர்களுக்கான கோடைகால திறன் வளர்ச்சி பயிற்சி முகாமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இவ்வாண்டு (2019) தமிழகத்தில் மாணவர்களுக்கான கோடைகால திறன் வளர்ச்சி பயிற்சி முகாம் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டி ஆண்கள் அறிவகத்தில் ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 30 வரை (10 நாட்கள்) துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்பட்டது.

இந்த முகாமில் மாணவர்களுக்கு மார்க்கத்தின் அடிப்படைகள், குர்ஆன் வகுப்பு, ஒழுக்கங்கள் போன்ற ஆன்மீக வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் போதிக்கப்பட்டது. அத்துடன் சக மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோரை பேணுதல், இஸ்லாமிய எழுச்சி வரலாறுகள், ஆளுமை, நேர நிர்வாகம், முதலுதவி, ஆரோக்கியம் மற்றும் உணவு, மொபைல் பயன்பாடு, ஃபாசிசம், மேற்படிப்பு வழிகாட்டுதல் போன்ற வகுப்புகளும் எடுக்கப்பட்டன. அத்துடன் மாணவர்கள் தினசரி பழக்கவழக்கங்களாக ஆக்கிக்கொள்ள வேண்டிய செய்தித்தாள் வாசிப்பு, குர்ஆன் மற்றும் துஆ மனனம், உடற்பயிற்சி, ஜமாஅத் தொழுகை பேணுதல் போன்ற விஷயங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.