பாப்புலர் ஃப்ரண்ட் மீதான அவதூறுச் செய்தி: வெளியான உண்மை

0

பாப்புலர் ஃப்ரண்ட் மீதான அவதூறுச் செய்தி: வெளியான உண்மை

குவியல் குவியலாக ஆயுதங்களை பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிக்கின்றது என்ற அவதூறு செய்தி ஒன்று பல்வேறு சமூக வலைத்தளங்களில் இந்துத்வ கும்பலால் திட்ட்மிட்டு பரப்பப்பட்டு வருகின்றது. இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து இந்தியா டுடே நடத்திய ஆய்வில் பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெரியவந்துள்ளது.

பேஸ்புக் தளத்தில் பக்வா திவானை என்பவர், குவியல் குவியலாக வாட்கள் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, “உறங்கிக் கொண்டிருங்கள் இந்துக்களே, உங்கள் ரத்தத்தை ஓட்ட முஸ்லீம்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர். கேரளாவில் உள்ள PFI இன் ஆயுதக்கிடங்கில் நடத்தப்பட்ட சோதனையில் அதிகளவிலான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் இந்தியா முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் உள்ள மஸ்ஜித்கள் மற்றும் மாதரசாக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

@VishuddhBhartiy என்ற மற்றொரு நபரோ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்து “இந்த ஆயுதங்கள் கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியான, தங்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் என்று அழைத்துக் கொள்ளும் PFI-SDPI இடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது” என்றும் “இன்னும் நீங்கள் தேச விரோத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா?” என்றும் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த செய்தி குறித்து இந்தியா டுடே நடத்திய ஆய்வின் போது கேரள மாநில காவல்துறை அதிகாரி அனூப் VRஇடம் இது குறித்து கருத்துக் கேட்க அவர் அப்படியான எந்த ஒரு சோதனையும் நடைபெறவில்லை என்றும் அத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பிடம் இருந்து இப்படி எந்த ஒரு ஆயுதமும் கைப்பற்றப் படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த போலிச் செய்தி குறித்து கருத்து தெரிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் பொதுச் செயலாளர் பஷீர், இது தங்கள் இயக்கத்தின் நற்பெயருக்கு கழங்கம் விழைவிக்க திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தி என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த செய்தி குறித்து சைபர் பிரிவு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதலில் இந்த போலிச் செய்தி மலயாளத்தில் பகிரப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படியிருக்க இந்த புகைப்படம் உண்மையில் ஒரு சீக்கிய வாள் தயாரிக்கும் தொழிற்சாலையின் புகைப்படமாகும். இதனை அந்த தொழிர்ச்சாலையின் உரிமையாளர் பச்சன் சிங்கும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் புகைப்படத்தில் இருப்பது தங்களது தொழிர்ச்சாலைதான் என்றும் தங்கள் தொழிர்ச்சாலையை காண வருபவர்கள் பலர் அங்கு புகைப்படம் எடுத்துச் செல்வார்கள் என்றும் அப்படியான புகைப்படம் தான் இது என்றும் பச்சன் சிங் தெரிவித்துள்ளார்.

Comments are closed.