பாரத் மாதா கீ ஜெய் என்று கூற மறுத்த மதரஸா மாணவர்கள் மீது தாக்குதல்!-ஒருவரது கை ஒடிந்தது!

0

புதுடெல்லி:பாரத் மாதா கீ ஜெய் என்று கூற மறுத்ததால் மூன்று மதரஸா மாணவர்கள் மீது இந்துத்துவா வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் ஒரு மாணவரின் கை ஒடிந்தது.

டெல்லி பேகம்பூர் பகுதியில் உள்ள பூங்காவில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதரஸா இடைவேளையில் பூங்காவிற்கு வந்த மாணவர்களிடம், 5 பேரைக் கொண்ட இந்துத்துவா வெறிக் கும்பல், ’பாரத் மாதா கீ ஜெய்’ என்று கூறுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதற்கு மறுத்த காரணத்தால் மாணவர்களை அக்கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.இத்தாக்குதலில் தில்காஷ் என்ற 17 வயதான மதரஸா மாணவரின் கை ஒடிந்தது.2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Comments are closed.