பாரத் மாதா விவகாரம்: உவைஸீயின் உருவ பொம்மையை எரிக்க முற்படுகையில் தன்னை தானே எரித்துக்கொண்ட ABVP உறுப்பினர்.

0

கான்பூரில் மார்ச் 16 அஸதுத்தீன் உவைஸீக்கு எதிரான போராட்டம் ஒன்றில் உவைஸீயின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற ABVP அமைப்பின் உறுப்பினர் தன்னை தானே தவறுதலாக எரித்துக்கொண்டார்.

பாரத் மாதா கீ ஜெய் என்று கூற மாட்டேன் என்று உவைஸீ கூறியதற்கு ஆஎ.எஸ்.எஸ். மற்றும் அதன் கிளை அமைப்புகளிடம் இருந்து பல எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. இதில் ஆர்.எஸ்.எஸ். இன் மாணவ அமைப்பான ABVP கான்பூரில் போராட்டம் ஒன்றை நடத்தியது.

இந்த போராட்டத்தில் பாரத் மாதா கீ ஜே என்று கூறியவாரே ஒரு ABVP உறுப்பினர் உவைஸீயின் உருவ பொம்மைக்கு தீயிட்டு கொளுத்த முற்பட்டார். அப்போது தவறுதலாக தனது சட்டையிலும் தீ வைத்துக்கொண்டார். தீயில் எரிந்து கொண்டிருந்த அவர் தனது சட்டையை கழற்ற முயன்று பரிதாபமாக துடித்துக் கொண்டிருந்த வேலையில் சுற்றி இருந்தவர்கள் பாரத் மாதா கீ ஜே என்று கோஷம் எழுப்பியவாறு இருந்தனர். பின்னர் அவரை மற்றவர்கள் காப்பாற்றினர்.

இந்த நிகழ்வில் காயமுற்ற அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகாவத் வரும் தலைமுறையினர்க்கு பாரத் மாதா கீ ஜே என்று கூறுவதை கற்பிக்க வேண்டும் என்று கோரியதை அடுத்து எனது கழுத்தில் கத்தி வைத்தாலும் நான் அவ்வாறு கூற மாட்டேன் என்று உவைஸீ கூறியிருந்தார். இதற்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க, மற்றும் சிவ சேனா கட்யினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

 

Comments are closed.