பாரத ஸ்டேட் வங்கி ATM இல் கள்ள நோட்டுக்கள்

0

உத்திர பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ATM மில் 2000 ரூபாயின் போலி நகல்கள் வெளிவந்ததை அடுத்து காவல்துறையினர் அதனை விசாரித்து வருகின்றனர்.

17 வயதான அர்விந்த் குமார் குப்தா என்ற நபர் கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ATM இல் இருந்து ரூபாய் 10000 எடுக்க சென்றுள்ளார். அங்கு ATM எந்திரத்தில் இருந்து வெளியான 2000 ரூபாய் தாள்களில் ஒன்று 2000 ரூபாயின் போலி நகல்ளாக இருந்ததுள்ளது.

இது குறித்து அவர் கூறியதாவது, “ATM எந்திரம் ஐந்து 2000 தாள்களை வெளியிட்டது. அதில் ஒன்று கள்ளநோட்டு” என்று கூறியுள்ளார். மேலும் அந்த போலி நோட்டு அசல் ரூபாயின் ஜெராக்ஸ் போல இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.

ATM இல் இருந்து வெளியான கள்ள நோட்டை வங்கி அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் அவர் கடந்த வெள்ளிக்கிழமை இதுகுறித்து காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளர்.

இது குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை, தங்களுது அந்த நோட்டு கள்ள நோட்டு தானா என்று உறுதிபடுத்த முடியவில்லை. வங்கியின் மேலாளர் வெளியூர் சென்றுள்ளார். அவர் ஊர் திரும்பியதும் இது குறித்து விசாரிப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்தபோலி நோட்டு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட ATM இன் CCTV வீடியோவையும் தங்களிடம் தருமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

இதே போல் மற்றொரு நிகழ்வில் தெற்கு டில்லியின் சங்கம் விஹார் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ATM ஒன்று ஐந்து 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை வெளியிட்டுள்ளது. அந்த நோட்டுக்களில் “Reserve Bank of India” என்பதற்கு பதிலாக “Children Bank of India” என்றும் “Guaranteed by the  Central Government”  என்பதற்கு பதிலாக “Children’s Government” என்றும் இன்னும் பல மாற்றங்களுடனும் அச்சிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ரூபாய் நோட்டுக்களை ATM எந்திரத்தில் வைத்த அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கள்ள நோட்டுக்களை தடுப்பதற்காக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது தான் இந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் என்று கூறப்பட்டாலும் வங்கிகள் மூலமாகவே இத்தனை கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

Comments are closed.