பாலடைந்த கிணற்றில் கிடைத்த திப்பு சுல்தான் காலத்து மைசூர் போர் ராக்கட்கள்

0

பாலடைந்த கிணற்றில் கிடைத்த திப்பு சுல்தான் காலத்து மைசூர் போர் ராக்கட்கள்

கர்நாடக மாநிலத்தின் சிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் திப்பு சுல்தான் போரில் பயன்படுத்திய ராக்கட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன என்று அம்மாநில தொல்லியல்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து R.ஷிஜேஷ்வரா நாயகா கூறுகையில், “கிணற்றை தோண்டுகையில் போரில் பயன்படுத்த பதுக்கி வைக்கப்பட்ட திப்பு காலத்து 1000 ராக்கட்கள் துருபிடித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார். “கிணற்றை தோண்டுகையில் வெடிமருந்து வாசனை வந்தது இந்த ராக்கட்களை கண்டுபிடிக்க உதவியது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ராக்கட்களை எடுக்க மொத்தம் 15 பேர் கொண்ட குழுவிற்கு மூன்று நாட்கள் ஆனது. இங்கு கிடைத்த ஒவ்வொரு ராக்கட்களும் சுமார் 23 இல் இருந்து 26 சென்டிமீட்டர்கள் இருந்தது என்றும் இவை மக்களின் பார்வைக்கு சிமோகா அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறையின் ஆவணங்களின் அடிப்படையில் ஷிமோகாவில் உள்ள கோட்டைப்பகுதி திப்புவின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. மேலும் இந்த ராக்கட்கள் தான் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக திப்பு புரிந்த யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடும் யுத்தங்களை நிகழ்த்தி பல வெற்றியைப் பெற்ற திப்புவின் போர் யுத்தங்களில் மைசூர் போர் ராக்கட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. திப்புவின் இந்த ராக்கட்களை மாதிரியாக வைத்து செய்த ராக்கட்களைத்தான் தான் ஆங்கிலேயர்கள் நெப்போலியனுக்கு எதிரான போர்களில் பயன்படுத்தினர்.

Comments are closed.