பாலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளில் தாக்குதலால் 12ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. அறிக்கை!

0

கடந்த  ஆண்டு தாக்குதலில் ஆப்கானிஸ்தான், ஏமன், பாலஸ்தீனம், சிரியா ஆகிய நாடுகளில் 12,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. அதேபோல் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி கொடூரமாக கொலை செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானிலும் இதே நிலைமை தான் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இந்த  நாடுகளில் கடந்த 2018ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற தாக்குதலில் பலியான குழந்தைகள் பற்றி ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும் கடத்தல் மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் என பல்வேறு வன்முறைகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன. இதில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.