பாலஸ்தீன் மீது நடத்தப்படும் அடக்குமுறையால் இஸ்ரேலிய ராணுவத்தில் பணியாற்ற மறுத்தவருக்கு சிறை தண்டை

0

இஸ்ரேலில் ஒவ்வொருவரும் கட்டாயமாக ராணுவ சேவை செய்திருக்க வேண்டும் என்பது சட்டம். 19 வயது நிரம்பிய தாயிர் கமினர் தன்னுடைய அந்த கட்டாய ராணுவ சேவையை செய்ய மறுத்துவிட்டார். காரணம் பாலஸ்தீனியர்கள் மேல் இஸ்ரேல் ராணுவம் நடத்தும் அடக்குமுறைகள் தான். இதனால் அவரை இருபது நாள் சிறையில் அடைக்க இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு அளிக்கப்பட இந்த சிறை தண்டனை இஸ்ரேலில் பல தரப்பட்ட கருத்து மோதல்களை உருவாக்கியுள்ளது.

ராணுவ சேவையை மறுத்தது குறித்து தாயிற் கமினர் கூறுகையில் தான் முன்னதாக இஸ்ரேலிய ராணுவத்துடன் இஸ்ரேல் – பாலஸ்தீன தாக்குதலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரில் கண்டு உதவியிருக்கின்றேன் என்றும் அவர்கள் மிகவும் அச்சத்தில் காணப்பட்டனர் என்றும் அவரின் இந்த அனுபவம் அவரை இராணுவ சேவை செய்ய தடுக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “போரால் பாதிக்கப்பட்ட பகுதியின் குழந்தைகளை கண்டுள்ளேன், அது எத்தகைய தாக்கத்தை அவர்கள் மீது ஏற்படுத்தியுள்ளது என்றும் அறிவேன். அச்சமும் வெறுப்பும் அவர்கள் மனதில் நிரம்பி இருகின்றது” என்றும் “அதனால் இதில் பங்கெடுக்க தான் விரும்பவில்லை” என்றும் “மேலும் ஆக்கிரமிப்பினால் இன்னும் அதிகப்படியான வெறுப்புக்கும் அச்சத்திற்கும் நான் பங்களிக்க போவதில்லை” என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து இஸ்ரேலிய செய்தி நிறுவனம் ஒன்று கூறுகையில் தாயிர் கமினர் வெறுப்பு மற்றும் அச்சத்திற்கு பங்களிக்க விரும்பவில்லை என்றும் அதற்கு பதிலாக சிறையை தேர்தேடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளது. இவரின் இந்த கருத்து ஆதரவாகவும் எதிராகவும் பல ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் இஸ்ரேலில் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

Comments are closed.