பாலியல் குற்றச்சாட்டு: நீதிபதியை விடுவித்ததை கண்டித்து போராட்டம்! உச்சநீதிமன்றத்தை சுற்றி 144 தடை!

0

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் போட்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு விசாரித்தது. அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் உண்மையில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க அவசியம் இல்லை. மேலும் நீதிபதிகள் இந்த விசாரணை குழு அறிக்கையை வெளிப்படையாக வெளியிட தேவையில்லை என நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கு விசாரணையில் புகார் அளித்த பெண் கலந்து கொள்ளவில்லை, அவர் சார்பாக வழக்கறிஞர் ஆஜராகவில்லை எனும் பட்சத்தில் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பிற்கு, புகார் அளித்த பெண் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த விசாரணை குழுவின் தீர்ப்பிற்கு நேற்று சில வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் , பெண் அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த தீர்பில் நீதி கிடையாது, என்று பலர் கருத்து தெரிவித்து, இன்று உச்சநீதிமன்ற வெளியில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதை தடுக்க உச்ச நீதிமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

Comments are closed.