“பாலியல் வன்கொடுமை ஓர் அரசியல் கருவி” -நியாயப்படுத்திய சாவர்க்கர்

0
“பாலியல் வன்கொடுமை ஓர் அரசியல் கருவி” -நியாயப்படுத்திய சாவர்க்கர் ஒரு கலவரம் உருவாகின்றபோது அங்குள்ள மக்களின் உடல், உடைமை, மானம் என அனைத்தும் சூறையாடப்படும். கண்களில் தென்படுவதெல்லாம் சிதைக்கப்படும். இதற்கு குஜராத் (2002) மற்றும் உத்தர பிரதேசம் முசஃபர் நகர் (2013) கலவரங்கள் சில சாட்சிகள். இந்த கலவரங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மிக மோசமான நிலையில் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆனால் எத்தகைய கொடிய உள்ளத்தாரும் இதை நியாயம் என்று பொது வெளியில் சொல்லத் தயங்குவர். குஜராத் மற்றும் முசஃபர் நகர் கலவரங்கள் நிகழ்த்தப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்துத்துவ தலைவர்களுள் ஒருவரான சாவர்க்கர் “பாலியல் வன்கொடுமை ஓர் சட்டப்பூர்வமான அரசியல் கருவி” என தனது நூலின் மூலம் நியாயப்படுத்தியுள்ளார். “இந்திய வரலாற்றின் புகழ்பெற்ற ஆறு சகாப்தங்கள்” (ஷிவீஜ் நிறீஷீக்ஷீவீஷீus ணிஜீஷீநீலீs ஷீயீ மிஸீபீவீணீஸீ பிவீstஷீக்ஷீஹ்) என்ற தனது புத்தகத்தில் இந்து நெறிகளை இவர் மறு கட்டமைப்பு செய்தார். இந்தப் புத்தகம், முந்தைய காலங்களில் இந்தியாவில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகளுக்கு, இந்துக்களின் எதிர்ப்பைக் குறித்த ஆறு புகழ்பெற்ற பதிவுகளின் தொகுப்பாகும். சாவர்க்கர் தன்னுடைய இறப்பிற்கு (1966) ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்நூலை மராத்தியில் எழுதியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த புத்தகத்திற்காக இவர் சேகரித்த வரலாற்று தரவுகளில் பெரும்பான்மையானவை சந்தேகத்திற் குரியவை. வெளிநாட்டு பயணிகளாலும், காலனித்துவ வரலாற்று ஆய்வாளர்களாலும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களின் கூட்டுத்தொகுப்பே இந்நூலிற்கான அஸ்திவாரம். மேலும் சாவர்க்கரின் சொந்த கருத்துகளையும், பயமுறுத்தும் கற்பனைகளையும் கொண்ட இந்த பெரும்புத்தகம், தன்னகத்தே கோபத்தையும் வெறுப்பையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. “நல்லொழுக்கங்களின் மீதான தவறான கருத்து” என்ற அத்தியாயத்தில், ‘எந்த ஒரு ஒழுக்க நெறியும், காலத்தையும் இடத்தையும் பொறுத்து மாறுபடக்கூடியது. மேலும் நல்லொழுக்கமும் தீமையும் ஒன்றோடொன்று தொடர்புடையது’ என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் நிலையான ஒழுக்க நெறிகளை இவர் நிராகரித்துள்ளார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.