பாலியல் வழக்கு: சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆயுள் தண்டனை

0

பாலியல் வன்புணர்வு வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு சூரத் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயணன் சாய் ஆகியோர் மீது குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த 2 சகோதரிகள் கடந்த 2013ஆம் ஆண்டு கற்பழிப்பு புகார் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த புகாரில், ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கி இருந்தபோது ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயணன் சாயும் தங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், சாமியார் ஆசாராம் பாபு அவரது மகன் நாராயணன் சாய் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையின்போது, நாராயண் சாயிக்கு எதிரான 50க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் சமர்ப்பித்த நிலையில், நாராயண் சாய் தலைமறைவானார்.

பிறகு அவரை காவல்துறையினர் கைது செய்து, பாலியல் முறைகேட்டு வழக்கில் சாய் குற்றவாளி என கடந்த 26ஆம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. அதையடுத்து, ஏப்ரல் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்திலையில் தீர்ப்பு வழங்கிய சூரத் நீதிமன்றம். அவருக்கு ஆயுள் தண்டனையுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. மேலும் முன்னதாக, சாமியார் ஆசாராம் பாபு ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.