பா.ஜ.க. அமைச்சர் சுபாஷ் தேஷ்முக் காரில் இருந்து 92 லட்சம் ரூபாய் பறிமுதல்

0

மாகாராஷ்டிரா மாநிலம் கூட்டுறவுத்துறை அமைச்சரான பா.ஜ.க வை சேர்ந்த சுபாஷ் தேஷ்முக் காரில் சுமார் 91.5 லட்சம் ரூபாய்களை பறக்கும் படை தனது வழக்கமான வாகன சோதனையின் போது கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவர் பதவிவிலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட இந்த பணம் குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தட்ட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இவரது வாகனத்தை பறக்கும் படை சோதனை செய்த போது அந்த வாகனத்தில் இருந்த லோக் மங்கள் என்ற கூட்டுறவு வங்கியின் ஊழியர் ஒருவர் இந்த பணம் லோக் மங்கள் வங்கிக்கு சொந்தமானது என்று கூறியுள்ளார். மேலும் அந்த பணம் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தொழிளார்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியப் பணம் என்று கூறியுள்ளார்.

இந்த பணம் சுபாஷ் தேஷ்முக்கின் வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதை ஒஸ்மானாபாத் கலக்டர் பிரஷாந்த் நர்நாவரேயும் உறுதி செய்துள்ளார். மேலும், இதுகுறித்து லோக் மங்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் வருமானவரித்துறையினரிடம் அப்பகுதி காவல்துறையினரிடமும் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த பணம் குறித்த சரியான ஆவணகளை சமர்ப்பித்தால் அப்பணம் அவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் இல்லையென்றால் இது குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாதது என்று அறிவித்தது தொடர்ந்து லோக் மங்கள் வங்கிகள் மூலமாக கறுப்புப் பண பரிமாற்றங்கள் நடைபெற்று வருகிறது என்று பா.ஜ.க. தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.